வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இயக்குனராக என்ட்ரி கொடுக்கும் ஜேசன் சஞ்சய்க்கு போன் போட்ட அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா.?

Jason Sanjay – Thalapathy Vijay: தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருப்பது தான் நேற்றிலிருந்து சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரல் ஆகி கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், சினிமா பிரபலங்கள் ஒரு பக்கம் என ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

விஜய்யின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த பொழுது குறும்படங்கள் இயக்கியும், நடித்தும் வந்தார். இதனால் அவருடைய சினிமா என்ட்ரி என்பது விஜய் ரசிகர்களால் ரொம்பவே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. அச்சு அசல் விஜய் போலவே இருக்கும் இவர், வழக்கமான வாரிசுகள் போல் ஹீரோவாக களம் இறங்குவார் என்று பார்த்தால், அவர் இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

Also Read:லைக்கா தயாரிப்பில் 2000 கோடிக்கு மேல் முதலீட்டில் வரிசையாக 11 படங்கள்.. விஜய் மகனையும் லாக் செய்த புத்திசாலித்தனம்

ஜேசன் சஞ்சய்க்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் அஜித் குமார் வாழ்த்து சொல்லி இருப்பதாக தெரிகிறது. மேலும் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுப்பது முன்பே அஜித்திற்கு தெரிந்திருக்கும் எனவும், அவர் தொலைபேசி வாயிலாக ஜேசனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருப்பதும் தற்போது வெளியில் வந்து இருக்கிறது.

ஜேசன் சஞ்சய் நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். தளபதி விஜய் கூட பல பேட்டிகளில் தன்னுடைய மகன் அஜித்தின் ரசிகர் என சொல்லி இருக்கிறார். எனவே இனிவரும் காலங்களில் சஞ்சய், நடிகர் அஜித்குமாரை இயக்க கூட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read:தளபதி 68ல் விஜய் நடிக்கப் போகும் கேரக்டர் இதுதான்.. நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் தயாராகும் சம்பவம்

ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவது எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, நடிகர் விஜய்யின் தலையீடும் இன்றி இயல்பாக நேற்று லைக்கா ப்ரொடெக்சன் ட்விட்டர் பேஜ்ஜில் அறிவிக்கப்பட்டது. தற்போது இவர் இயக்கும் படத்திற்கான அடுத்த கட்ட அப்டேட்டுகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மேலும் கதாநாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று இருப்பதாகவும் தெரிகிறது.

தற்போதைய தகவலின் படி ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி மற்றும் துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

Also Read:தளபதி 68 லேட்டஸ்ட் அப்டேட்.. பிகில் பாணியை கையில் எடுக்கும் வெங்கட் பிரபு

Trending News