பெரும் நெருக்கடியில் AK61.. குறி வைத்து அடிப்பதால், அடக்கி வாசிக்கும் போனி கபூர், அஜித்

ajith kumar boney kapoor
ajith kumar boney kapoor

எச் வினோத், அஜித், போனிகபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் AK61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமே சூடு பிடிக்கத் தொடங்கியது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்தது.

வலிமை படம் போல் இழுக்காமல் இப்படத்தை சீக்கிரம் வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஏனென்றால் நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வலிமை படம் வெளியானது. இதனால் அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் AK 61 குறுகிய கால தயாரிப்பு என்று சொன்னார்கள். இதனால் ஆகஸ்ட் இறுதிக்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று எச் வினோத் மற்றும் அஜித் ஆரம்பத்தில் படுஜோராக இறங்கி வேலை செய்தனர். ஆனால் தற்போது இந்த படம் கொஞ்சம் டல் அடித்துவிட்டது.

ஏற்கனவே இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அஜித் மாற்ற சொன்னதாக தகவல் வெளியானது. இதனால் அஜித் அந்த இடைவெளியில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் AK61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் பாக்கி இருக்கிறதாம்.

இப்போது சினிமாவில் உள்ள பெரும் புள்ளிகளின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஐடி ரைட் அடுத்தடுத்து நடந்து வந்தது. இதனால் அடுத்ததாக போனி கபூரை குறி வைக்கலாம் என்று கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களாம். ஏனென்றால் போனி கபூரின் வலதுகரம் வரை ஐடி ரைட் வலைவீசி உள்ளனராம்.

இதனால் கலக்கமடைந்த போனிகபூர் AK61 படத்தில் சற்று யோசித்து செயல்படலாம் என திட்டமிட்டுள்ளனராம். இதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டது போல் தெரிகிறது. இதனால் AK61 படம் இன்னும் தாமதமாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement Amazon Prime Banner