வலிமை படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடித்துக்கொண்டிருக்கும் ஏகே 61 படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2 வாரங்களாக அஜித் குமார் இமயமலைப் பகுதிகளில் பைக் லைட் செய்துகொண்டிருக்கிறார். இதற்கு முன்பு ஐரோப்பா பகுதிகளில் பைக் ரைட் செய்துகொண்டிருந்த அஜித், அதை முடித்துவிட்டு படப்பிடிப்பில் இணைவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் தற்போது இமயமலை பகுதிகளில் பைக் ரைடில் ஈடுபட்டுள்ளார்.
அஜித்தின் கேதார்நாத் புகைப்படம்

இந்த பயணத்தில் ஏகே 61 படத்தின் கதாநாயகி மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். சமீபத்தில் லடாக் புத்தகோயிலில் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட அஜித், அதைத்தொடர்ந்து தற்போது சிவ ஸ்தலமான கேதார்நாத் சென்று தரிசனம் செய்துள்ளார். அதேபோல் வைணவ ஸ்தலமான பத்ரிநாத்திற்கும் சென்றிருக்கிறார். அங்கு எடுத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
முனிவர் போல நீண்டு கொண்டே போகும் அஜித்தின் தாடி

Also Read: விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்
இந்த புகைப்படங்களில் எல்லாம் அஜித் நீண்ட வெள்ளை தாடியுடன் முனிவரையே மிஞ்சும் அளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். ஏகே 61 படத்தில் இரண்டு கெட்டப்பில் நடிக்கவிருக்கும் அஜித், வில்லன் கெட்டப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அஜித் செல்லும் வழியெல்லாம் அவருடன் ரசிகர்களும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இமயமலை பகுதிகளில் அஜித்

இந்த பயணத்தை முடித்த பிறகு அஜித், ஏகே 61 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இணைய திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து 25 நாட்கள் தாய்லாந்தின் நடைபெறுகிறது. அத்துடன் அந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
Also Read: மீண்டும் வேகமெடுக்கும் ஏகே 61.. பம்பரமாக சுழன்று நடிக்க போகும் அஜித்