புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்தடுத்து வெளிவரும் போட்டோவால், அஜித்திற்கு வெடித்த பிரச்சனை.. இப்படி எல்லாமா பண்றது

வலிமை படத்திற்கு பிறகு அஜித் H.வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான இடைவேளை நேரங்களில் அஜித் பைக் ரைடை மேற்கொள்கிறார். இது சம்மந்தமான புகைப்படங்களும், விடீயோக்களும் தினமும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

அஜித் ஒரு பைக் பிரியர் மற்றும் பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜித் பொதுவாக தனியாகவே பைக் ரைட் செய்வார். ஆனால் இப்போது அவருடைய அடுத்த படத்தின் ஹீரோயினான மஞ்சு வாரியருடன் பைக் ரைடு செய்து கொண்டிருக்கிறார்.

Also Readநெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகர் ஏகே.. பிராடு சிட்டிசன் அஜித் என்னும் ஹாஸ்டேக் டிரண்ட்

அஜித், மஞ்சு வாரியர் அவருடைய உதவியாளர் மற்றும் குழுவினர்கள் பைக் ரைடு செய்யும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது. எந்த ஹீரோயின் கூடவும் பைக் ரைடு போகாத அஜித் மஞ்சு வாரியருடன் செல்வது இப்போது பேசு பொருளாகி விட்டது.

இதை பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். இதனால் ஷாலினியும் சற்று எரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அஜித் இது போன்ற காசிப்ஸில் சிக்கியது இல்லை. மிஸ்டர் கிளீனாக இருந்த அஜித் மீது இது மாதிரியான ட்ரோல்கள் இப்போது வருகின்றன.

Also Read: கொஞ்சம் கூட மதிக்காத அஜித்.. மொத்த வித்தையையும் பாலிவுட்டில் களமிறக்கி வெற்றி பெற்ற இயக்குனர்

தன்னுடைய உருவ அமைப்பால் அஜித் கேலிக்குள்ளாகி இருந்தாலும், பெண்கள், கண்ணியம் என்ற விஷயத்தில் தவறியதே இல்லை. இத்தனை வருடங்களாக அஜித் எந்த ஒரு சிக்கலில் மாட்டியதே இல்லை எனலாம்.

ஏற்கனவே அஜித் லைசன்ஸ் காலாவதியான பைக்கை ஓட்டுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலானது, ஆனால் அது பொய் என்பதை அஜித் தரப்பில் இருந்து நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதனிடையில் அஜித்-மஞ்சு வாரியார் பைக் ரைடில் சேர்ந்து போவது மேலும் அஜித்துக்கு எதிராக எல்லாவற்றையும் சாதகமாக்கி கொண்டிருக்கிறது.

Also Read: அஜித்துக்கு பயத்தை காட்டிய சினிஉலகம்.. ஈகோவை விட்டு இறங்கி வரும் ராஜதந்திரம்

Trending News