வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

AK 52,62 என ட்விட்டரை ஆக்கிரமித்த அஜித்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் அஜித் ஃபேன்ஸ்

பொதுவாக ஒரு ஹீரோவின் நடிப்பு திறமையை பார்த்து தான் அவருக்கு ரசிகர்கள் கூடுவார்கள். ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் அவருடைய நற்பண்புகாகவே நிறைய ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். ஆரம்பத்தில் சினிமா பின்புலம் இல்லாமல் வந்த அஜித் பல கேலி, கிண்டல்களை சந்தித்துள்ளார்.

ஆனால் இப்போது அஜித் தனது விடாமுயற்சியால் விஸ்வரூபம் எடுத்த உள்ளார். அதேபோல் உழைப்பாளர்கள் தினமான மே ஒன்று தான் அஜித்தின் பிறந்தநாள். ஆகையால் இன்று இணைய முழுக்க அஜித் அகரமித்து உள்ளார். அதாவது இன்று அஜித் தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Also Read : ஏகே 62 டைட்டில் வெளியானது.. மீண்டும் வி சென்டிமென்டில் சிக்கிய அஜித்

ஆகையால் ஏகே 52 என்ற ஹேஸ்டேக் ஒருபுறம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் மறுபுறம் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று 12:00 மணி அளவில் லைக்கா தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே ஏகே 62 ஹேஷ்டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இது தவிர தல, அஜித், விடாமுயற்சி என அஜித்தை குறிப்பிடும் வகையில் அவரது ரசிகர்கள் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் அஜித் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருப்பது தான் ரசிகர்களை மென்மேலும் கவர்ந்து உள்ளது.

Also Read : நண்பர் தயாரிப்பில் அஜித் வெற்றி கண்ட 9 படங்கள்.. மூன்று கெட்டப்பில் படைத்த வரலாறு

அதுமட்டுமின்றி ஒரு பண்டிகை போல் அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அஜித்தை பொறுத்தவரையில் தனது ரசிகர்கள் தேவையில்லாமல் மற்றவற்றில் நேரத்தை செலவிடுவதில் விரும்ப மாட்டார். தன்னுடைய படத்தை பார்த்தால் மட்டுமே போதும் என்பது தான் அவருடைய நிலைப்பாடு.

அதனால் தான் தன்னுடைய ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தார். அதுமட்டுமின்றி தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இவ்வாறு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத மனுஷனை அவரது ரசிகர்கள் உச்சத்தில் வைத்து கொண்டாட வேண்டும் என்பதால் இணையத்தில் அஜித் செய்யும் நல்ல விஷயங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

Also Read : இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

Trending News