புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சலார் படத்தை ஓவர் டேக் செய்த அஜித்தின் தம்பி.. 270 கோடி படத்தை தூள் தூளாக்கிய சின்ன பட்ஜெட் படம்

Small Budget Movie Overtake Salaar : இது என்னடா பிரபாஸுக்கு வந்த சோதனையா? என்பதற்கு ஏற்ற மாதிரி தொடர் தோல்வி அடைந்து வருகிறார். பாகுபலி படத்துக்குப் பிறகு படத்தின் கதையும் சரி, நடிப்பும் சரி பிரபாஸிடம் இருந்து பெருசாக சொல்லும்படி மக்களை கவரவில்லை. அதிலும் கடைசியாக வந்த ஆதிபுரூஸ் படம் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி பிரபாஸின் பெயரை டேமேஜ் பண்ணிவிட்டது.

இதனை சரிக்கட்டும் விதமாக கேஜிஎப் இயக்குனருடன் கமிட் ஆன சலார் படமாவது ஓரளவுக்கு இவருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. ஆனால் இதுவும் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு ஏற்ப படம் கலவையான விமர்சனங்களை பெற்று மக்களை ஏமாற்றி விட்டது. முக்கியமாக இப்படம் எடுக்கும் பொழுது மிகப் பிரம்மாண்டமாக 270 கோடிக்கு மேல் பட்ஜெட் ஆயிருக்கிறது என்று படத்தின் மீது அதிக ஹைப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.

ஆனால் படத்தை பார்த்த பிறகு கேஜிஎஃப் படத்தையும், பாகுபலி படத்தையும் ஒன்னா சேர்த்து பார்த்தது போல் ஒரு ஃபீலிங் தான் இருக்கிறதே தவிர இதில் வித்தியாசமாக எதுவும் இல்லை. அத்துடன் அந்த படத்தையாவது பார்க்கும் பொழுது நல்லா இருந்தது. இது சுத்த வேஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு சலார் படம் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை.

Also read: தலையை சுற்ற வைக்கும் பிரபாஸின் சொத்து மதிப்பு.. 44 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

இதற்கு இடையில் இப்படத்தை அனைத்து திரையரங்களிலும், மால்களிலும் 4 காட்சிகள் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஒன்று மக்கள் மனதை கவர்ந்து விட்டது. அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் இவருடைய தம்பியாக நடித்த விதார்த்தின் 1000 பொற்காசுகள் படம் வெளியாயிருக்கிறது.

இப்படம் ஒரு நல்ல ஹியூமர் படமாக இருக்கிறதாம். அதனால் இப்போதைக்கு வந்த படங்களிலே இந்த படம் பரவாயில்லை என்று மக்கள் அனைவரும் விதார்த் படத்தை பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சலார் படம் மொக்கையாக இருக்கிறது. இதற்கிடையில் தற்போது வின்டர் ஹாலிடேஸ் அதிக நாட்கள் இருப்பதால் மக்கள் எந்த படத்தை பார்க்கலாம் என்று அலைமோதி கொண்டு வருகிறார்கள்.

இந்த சமயத்தில் ஒரு பெரிய நடிகர் படம் என்றால் அது சலார் படம் தான். அந்த வகையில் கொஞ்சமாவது மக்களுக்கு பிடித்த மாதிரி இருந்திருந்தால் ஓரளவுக்கு வசூல் அளவிலும் கல்லாகட்டிருக்க முடிந்திருக்கும். ஆனால் சொதப்பியதால் தற்போது எந்த படத்தை பார்ப்பது என்று தெரியாமல் மக்கள் திக்கு முக்காடி திண்டாடி வருகிறார்கள். இந்த கேப்பில் விதார்த்தின் 1000 பொற்காசுகள் படம் அதற்கான இடத்தை பிடித்து விட்டது.

Also read: Salaar Movie Review- கன்சார் சாம்ராஜ்யத்திற்கு எதிராக எரிமலையாய் வெடிக்கும் பிரபாஸ்.. சலார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News