ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித்தின் ஆரம்பம் முதல் துணிவு வரை வசூல் ரிப்போர்ட்.. அதிக வசூலை அல்ல டார்கெட் பண்ணிய விடாமுயற்சி

Ajith Movie Collection: ஒவ்வொரு ஹீரோக்களையும் அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போவது அவர்கள் நடித்து வெளிவரும் படங்களின் வசூல் ரிப்போர்ட்டை பொறுத்துதான். அதிக வசூலை கொடுத்து விட்டால் அந்த ஹீரோக்களின் மார்க்கெட் ரேட்டும் அதிகரித்து விடும். மக்களிடமும் ஃபேவரிட் ஹீரோ என்ற இடத்தையும் தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களின் வசூல் ரிப்போர்ட் விவரங்களை பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

ஆரம்பம்: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித், ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 60 கோடியில் எடுக்கப்பட்டு உலக அளவில் 135 கோடி வசூலை பெற்று வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

விடாமுயற்சியை மலைபோல் நம்பும் அஜித்

வீரம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு அஜித், தமன்னா நடிப்பில் வீரம் திரைப்படம் வெளிவந்தது. காதல், ஆக்சன், செண்டிமெண்ட் என காட்டப்பட்டு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுவிட்டது. 45 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ஒட்டு மொத்தமாக 148 கோடி லாபத்தை அடைந்தது.

என்னை அறிந்தால்: கௌதமேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் பட்ஜெட் 50 கோடியில் எடுக்கப்பட்ட நிலையில் 142 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய லாபத்தை கொடுத்திருக்கிறது.

வேதாளம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், சுருதி மற்றும் லட்சுமிமேனன் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வேதாளம் திரைப்படம் வெளிவந்தது. இதில் லோக்கல் ரவுடியாக இருக்கும் வேதாளம் லட்சுமிமேனன் காட்டும் அன்பை புரிந்து கொண்டு ஒரு பாசமான அண்ணனாக மாறி அவரை காப்பாற்றும் விதமாக கதை இருக்கும். இப்படம் கிட்டத்தட்ட 160 கோடி வசூலை பெற்று இருக்கிறது.

விவேகம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அஜித் காஜல் அகர்வால் நடிப்பில் விவேகம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 130 கோடி பட்ஜெட் போட்டு எடுத்த படம் 206 கோடி வசூலை பெற்றது.

விசுவாசம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் குடும்பம் சென்டிமென்ட் காட்சியை வைத்து விசுவாசம் திரைப்படம் வந்தது. இப்படம் அந்த ஆண்டு வெளிவந்த தென்னிந்திய படங்களிலே அதிக வசூல் செய்த படமாக இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் 100 கோடி போட்டு எடுக்கப்பட்ட ஏற்படத்திற்க்கு 250 கோடிக்கு மேல் லாபம் கிடைத்திருக்கிறது.

நேர்கொண்ட பார்வை: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்தது. இப்படம் 210 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது.

வலிமை: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வலிமை திரைப்படம் வெளிவந்தது. 150 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் டபுள் மடங்காக 300 கோடிக்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.

துணிவு: எச். வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு அஜித் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளிவந்தது. 200 கோடியில் எடுக்கப்பட்டு 330 கோடி லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.

விடாமுயற்சி: பல இடைஞ்சல்களை தாண்டி தற்போது ஓரளவுக்கு முடிவை நெருங்கி விட்டது என்று சொல்லும் அளவிற்கு படப்பிடிப்பு அனைத்தும் முடிந்திருக்கிறது. மீதம் இருக்கும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் கையோடு முடித்துவிட்டு அக்டோபர் 31 ரிலீஸ் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் எப்படியும் இப்படத்தின் மூலம் 400 கோடி வரை லாபம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

Trending News