திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஷாமிலியின் ஓவிய கண்காட்சியில் மெழுகு சிலை போல் இருக்கும் அஜித்தின் மகள்.. ஷாலினியை ஓரம் கட்டும் அழகு

Ajith Daughter Photos: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு ‘ஒய்’ என்ற படத்தில் சித்தார்த்திற்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி. இப்போது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தன்னுடைய ஓவியத் திறமையை நாடறிய காட்டிக் கொண்டிருக்கின்றார்.

அதிலும் பெண்களை மட்டுமே மையமாக வைத்து இவர் பெரும்பாலும் ஓவியத்தை வரைந்து காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் துபாயில் ‘வேர்ல்ட் ஆர்ட் துபாய்’ என்ற சர்வதேச ஓவியக் கலைக்கூடத்தில் தன்னுடைய ஓவியத்தையும் வைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

Also Read: அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

இதற்கு ஏராளமான வெளிநாட்டவர்களும் தமிழ் ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இப்போது சென்னையிலும் சி(She) என்ற தலைப்பில் தன்னுடைய ஓவியத்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதில் பெண்கள் எவ்வளவு மகத்துவமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு முழு சுகந்திரத்தை கொடுத்தால் எப்படி இருப்பார்கள் என்பதையும் தன்னுடைய ஓவியத்தின் மூலம் காட்டியிருந்தார்.

ஷாமிலியின் ஓவியக் கண்காட்சி சிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே அவருடைய அக்கா ஷாலினியும் மகளுடன் வந்திருந்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஷாமிலியின் ஓவிய கண்காட்சி

shalini-family-cinemapettai
shalini-family-cinemapettai

Also Read: அஜித்தால் தான் தன்னுடைய கேரியரே போச்சு.. பரபரப்பாக பேட்டியளித்த எதிர்நீச்சல் பிரபலம்

இதில் அஜித் ஷாலினியின் மகள் அனோஷ்கா மெழுகுச் சிலை போல் செம க்யூட்டாக இருக்கிறார். இவர் நடிகைகளான ஷாலினி, ஷாமிலிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்த கதாநாயகியாக தயாராகி நிற்கிறார். அதுமட்டுமல்ல இவர் உயரத்திலும் தன்னுடைய அம்மா ஷாலினியை ஓவர் டேக் செய்து விட்டார்.

இவருடைய இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது தல ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பது மட்டுமல்லாமல் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அஜித் ஷாலினியின் மகள் அனோஷ்கா

shalini-daughter-cinemapettai
shalini-daughter-cinemapettai

Also Read: விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

Trending News