பொதுவாக நடிகர் அஜித் மற்ற நடிகர்களை விட சற்று வித்தியாசமானவர். பொது வெளிகளில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு ஹீரோ போன்ற எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் உலா வர நினைப்பவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, பாலாபிஷேகம்,ரசிகர் மன்றம் இவை அனைத்தையும் விரும்பாதவர்.
ஆனால் அவர் இப்படி நடந்துக்கொள்வதற்கு ஒரு கசப்பான காரணமும் உண்டு. அந்த காரணத்தால் தான் நடிகர் அஜித் உங்கள் சகவாசமே வேண்டாம் என்று பல விஷ்யங்களில் ஒதுங்கி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு தலைவனுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில் அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த டாகடர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனைகளுக்காக இந்த விழா நடத்தப்பட்டது.
Also Read: அஜித் தெரியாதுன்னு சொன்னது ஒரு குத்தமா.? கொலவெறியில் நெட்டிசன்கள் செய்த சம்பவம்
இவ்விழாவில் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு கலைஞர் அவர்களின் சாதனைகளை பற்றி பேசினார். இவ்விழாவில் முக்கியமாக நடிகர் அஜித், சூர்யா, சூப்பர்ஸ்டார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட நிலையில், அஜித் மேடையில் பேசிய வார்த்தைகள் மிகவும் சர்ச்சையாக வெடித்தது.
அந்த மேடையில் பேசிய அஜித், ஆரம்பத்தில் கருணாநிதி அவர்களின் சாதனையை புகழும் வகையில் பல விஷயங்கள் பேசினார். ஆனால் போகப் போக சினிமா பிரபலங்களை எந்த ஒரு சமூக பிரச்சனைக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தனைகளை வைக்காதீர்கள் என்றும் எங்களுக்கு சினிமா போதும் அரசியல் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
Also Read: ஜெயிலரால் வேகம் எடுக்கும் ரஜினி, ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. சிக்கலில் மாட்ட போகும் விஜய்
இவரது இந்த பேச்சுக்கு சூப்பர்ஸ்டார் எழுந்து நின்று கைத்தட்டினார். அதே சமயத்தில் எங்களை மிரட்டி இதுபோன்ற விழாவிற்கு கூப்பிட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அஜித் அம்மேடையில் விடுத்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில், சில தொண்டர்கள் அஜித் வீடு போகும் வரை அவர் மீது தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளை செய்துள்ளனர்.
இதையறிந்த சூப்பர்ஸ்டார் அன்று இரவே அஜித்தை அழைத்து சென்று கருணாநிதியிடம் பேச வைத்து இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்தார். அதன் பின்பு தான் நடிகர் அஜித் இனி எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்துள்ளாராம். மேலும் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் மீது இருந்த பாசத்தால் இந்த பிரச்னையை விரைந்து முடிக்க உறுதுணையாக இருந்துள்ளார்.
Also Read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்