ஆதிக்கை மிஞ்சிய அஜித்தின் தீவிர ரசிகர்.. அடுத்த ஃபேன் பாய் சம்பவம்

Ajith : தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பெரிய பட்ஜெட் படங்கள் முக்கியமல்ல. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் சில படங்கள் வெளியாகிறது. அந்த வரிசையில் 3BHK படம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

இந்த சூழலில் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அஜித்தின் தீவிர ரசிகர் தீவிர ரசிகர். இவர் பல பேட்டிகளில் இதுகுறித்து பேசியும் இருக்கிறார். அதாவது அஜித் சார் உடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ண வேண்டும் என்பது தான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரனை மிஞ்சும் அஜித்தின் ஃபேன் பாய்

அப்படி அஜித்துடன் படம் வேண்டும் வேண்டும் என்றால் அந்த அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிதான் 3BHK படம் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். மேலும் தன்னுடைய இயக்கத்தில் சில படங்கள் வரவேற்பை பெற்றால் தான் அஜித் சாருடன் படம் பண்ண முடியும் என்று ஸ்ரீ கணேஷ் கூறியிருக்கிறார்.

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தின் டிரைலரில் விசுவாசம் பட போஸ்டர் இடம் பெற்றிருந்தது. அதாவது இந்த படத்தின் கதையை எழுதிய பிறகு மதுரையை ஸ்ரீ கணேஷ் சுற்றி வந்தாராம். அப்போதுதான் விசுவாசம் பட அப்டேட் முதல் நாள் வெளியான நிலையில் மறுநாள் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் போஸ்டர் இருந்ததாம்.

அப்படியே மதுரையே மாறிவிட்டதாம். அவ்வாறு ஒரு இளைஞன் என்னென்ன விஷயங்களை உற்று நோக்குவான் என்பதை வைத்துதான் அந்த போஸ்டர் இடம்பெற்றதாக கூறியிருக்கிறார். மேலும் அஜித்தின் ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் குட் பேட் அக்லி படத்தை செதுக்கிய நிலையில் ஸ்ரீ கணேஷுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →