வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தின் விடாமுயற்சி கைவிடப்படுகிறதா? முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆச்சு

Ajith: முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ அஜித்துக்கு நன்றாகவே பொருந்துகிறது. அதாவது அஜித்தை பொருத்தவரை வருஷத்துக்கு ஏதாவது ஒரு படத்தை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி சினிமாவை அதிக அளவில் ஆர்வத்துடன் மற்ற நடிகர்களைப் போல பெருசாக தூக்கிக் கொண்டாட மாட்டார்.

அத்துடன் வெற்றியோ தோல்வியோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒவ்வொரு வருஷத்துலேயும் ஒரு படத்தை பண்ணுவதில் மட்டும் மெனக்கெடு செய்வார். அப்படி கடந்த வருடம் துணிவு படம் வந்த பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகினார். ஆரம்பத்தில் இப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போவதாக இருந்தது. ஆனால் இவருக்கும் அஜித்துக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் கூட்டணி அப்படியே முறிந்து விட்டது.

அதன் பின் மகிழ் திருமேனி கூட்டணியில் இணைந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆனது. அந்த அளவிற்கு அஜித் இதில் ரொம்பவே கேர்லெஸ்ஸாக இருந்து பைக் வேர்ல்ட் டூரில் ஆர்வம் காட்டி வந்தார். ஒரு வழியாக எல்லாத்தையும் முடித்து படபிடிப்பு சுமூகமாக நடைபெற்று வந்தது.

Also read: அப்பல்லோவில் அஜித்திற்கு ஆபரேஷனா.? அதிர்வலையை ஏற்படுத்திய அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா என்பதிலே சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் லைக்கா இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்தி வைக்கலாம் என்று ஒரு முடிவில் இருக்கிறார். இன்னொரு பக்கம் அஜித்துக்கு உடல்நிலை பிரச்சனையால் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்து கொண்டே இருக்கிறது.

ஆக மொத்தத்தில் எந்த நேரத்தில் படத்தை ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டாரோ, அப்பதிலிருந்து பிரச்சனை மேல் பிரச்சனை தான் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி வருவதால் அவருக்கு போட்டியாக இருக்கும் அஜித், சினிமாவை மொத்தத்தையும் கையில் எடுத்து ஒன் மேன் ஆர்மியாக ஜெயிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அதை மொத்தத்தையும் சொதப்பும் வகையில் சினிமாவை கோட்டை விட்டு வருகிறார். ஏதோ படத்தில் நடிப்பது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே நினைத்து நடிக்கிறார். கிடைக்கிற கேப்புல பைக்கை ஓட்ட போயிட்டு வருகிறார். இப்படி அஜித்தின் அஜாக்கிரதையால் தான் ஒவ்வொன்றும் பிரச்சினையில் போய் முடிகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி படத்தை சரியான முறையில் தேர்ந்தெடுக்க தவறியதால் தற்போது திக்கு திசை தெரியாமல் நிற்கிறார்.

Also read: நண்பரின் இறப்பால் அஜித்துக்கு வந்த பயம்.. மருத்துவமனை சென்றதன் காரணம் இதுதான்

Trending News