வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறியது.. அதைப்போல் கனவை நிறைவேற்ற துடிதுடிக்கும் இளையராஜா

நடிப்பில் மட்டுமல்ல சமையல், கார் பைக் ரேசிங், ஏரோநாட்டிக்கல் என மற்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அஜித் குமார். அதிலும் தன்னுடைய ஒரு படத்தை முடித்து விட்டால் உலகம் முழுவதும் பைக் ரைட் செய்ய கிளம்பி விடுவார். இப்போது அஜித் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி விட்டார். அவரைப் போலவே இளையராஜாவும் தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்ற வேண்டும் என துடித்து துடித்துக் கொண்டிருக்கிறார். 

அதாவது அஜித் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரம்பித்து  தன் பெயரை காப்பாற்றி விட்டார். இவர் புதிதாக ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற சுற்றுலா நிறுவனத்தை துவங்கி, அதில் ஆர்வமாக இருக்கும் பைக் ரைடர்ஸ் சாதனை ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு  தேவையான வழிமுறைகளுடன் ட்ரைனிங்-கும் கொடுக்கப்படுகிறது.   மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் பைக் ரைட்ஸ் செய்ய விரும்புபவர்களுக்கு அத்துணை ஏற்பாடுகளும் செய்து தரப்படுகிறது.

Also Read: ஐடி ரைடு, படப்பிடிப்பு தாமதம்.. அஜித்தின் பொறுமையை சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி

இதில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மேற்கொள்பவர்களின் வசதிக்கு ஏற்ப  முழுமையான நம்பக தன்மை மற்றும் செயல்திறன் உறுதி செய்த நன்கு பராமரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் வழங்கப்படும். அதுமட்டுமல்ல இந்த சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்பவர்களுடன் தொழில் முறை வழிகாட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளின் சுற்று பயணங்களில் முழு நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர்களும் அவர்களின் கூடவே இருப்பார்கள். 

இதனால் ஏகே ஆரம்பித்த அகாடமி மூலம்  அவர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக பயணத்தை  வழங்க முடியும். இவ்வாறு தன்னைப்போல பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டவர்களை  வழிநடத்தும் நோக்கத்தில் தான் அஜித் இந்த ஏகே மோட்டோ ரைடு என்ற அகாடமி துவங்கி இருக்கிறார். அதேபோல் இளையராஜாவிற்கும் நீண்ட நாள் ஒரு ஆசை இருந்துள்ளது. இப்பொழுது அஜித்தின் நிறைவேற்றி விட்டதால் அவருக்கும்  அவருடைய  ஆசையின் வெறி அதிகமாகியுள்ளது.

Also Read: தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு

இளையராஜாவிற்கு நீண்ட நாட்களாகவே ஒரு இசை பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவுவதாக தெரியவில்லை. இளையராஜா தன்னிடம் இருக்கும் இசைஞானத்தை இளைய தலைமுறைகளுக்கும் கற்பிக்க வேண்டும் என நினைத்து எப்படியாவது ஒரு இசை பல்கலைக்கழகத்தை துவங்கி விடலாம் என பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் கம்மியாக இருக்கும் அஜித் தனக்கு முன்பே ஒரு அகாடமியை துவங்கிவிட்டதால் தானும் எப்படியாவது சீக்கிரம் நினைத்தபடி யுனிவர்சிட்டியை துவங்க வேண்டும் என்று வெறித்தனமாக களத்தில் இறங்கி இருக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் தன்னுடைய திறமைகளை மற்றவருக்கு உதவுமாறு செய்தால் நன்று என சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர். 

Also Read: சர்வதேச அளவில் புது நிறுவனத்தை தொடங்கிய அஜித்.. திரையுலகை மிரள விட்ட அறிவிப்பு

Trending News