வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தின் மச்சானால் பெருமூச்சு விட்ட தம்பி ராமையா.. புளியங்கொம்பை பிடித்த மகன்

Tambi Ramaiah: வெள்ளித்திரையில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்க கூடியவர் தம்பி ராமையா. சினிமாவில் மிகவும் செல்வாக்குடைய நபராக திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி பிக் பாஸ் மூலம் பிரபலமான யாஷிகாவுடன் டேட்டிங் செய்து வந்தார்.

இது தம்பி ராமையாவுக்கு சுத்தமாக பிடிக்காத காரணத்தினால் தனது மகனிடம் இதுகுறித்து பேசினார். ஆனாலும் அவரிடம் இது செல்லுபடி ஆகாத நிலையில் நேரடியாக யாஷிகா இடமே தனது மகனுடன் பழக வேண்டாம் என்று தம்பி ராமையா கூறியிருந்தாராம். ஆனாலும் இவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றித்திரிந்தனர்.

Also Read : எல்லா கெட்டப்பிலும் முத்திரை பதிக்கும் 5 நடிகர்கள்.. கொத்தளியாக மிரள வைத்த தம்பி ராமையா

இதனால் மிகுந்த உளைச்சலில் தம்பி ராமையா இருந்து வந்தார். இந்த சூழலில் உமாபதி மற்றும் யாஷிகா இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த சூழலில் 45 வயதாகும் அஜித்தின் மச்சானான ரிச்சர்ட் ரிஷியுடன் யாஷிகா நெருங்கி பழகி வருகிறார்.

மேலும் யாஷிகா மற்றும் ரிச்சர்ட் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், முத்த புகைப்படங்கள் ஆகியவற்றை சோசியல் மீடியாவில் தெறிக்கவிட்டார்கள். ஆனாலும் மீண்டும் யாஷிகா உடன் தனது மகன் மீண்டும் ஒட்டிக் கொள்வாரோ என்ற கவலை தம்பி ராமையாவிடம் இருந்தது.

Also Read : தம்பி ராமையாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய இயக்குனர்.. அவர் இல்லாமல் இவர் படம் வெளிவராது

ஆனால் இப்போது உமாபதி புளியங்கொம்பை பிடித்துள்ளதால் தம்பி ராமையா நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். அதாவது யாஷிகா உடன் பிரேக்கப் ஆன நிலையில் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவை காதலித்து வருகிறார். தம்பி ராமையாவுக்கு இந்த விஷயம் தெரிந்த உடனே திருமணத்தை முடிக்க ஏற்பாடு செய்து தருகிறார்.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அர்ஜுனின் மகள் என்றால் கண்டிப்பாக தம்பி ராமையாவுக்கு செல்வாக்கு அதிகம் தான். அதுமட்டுமின்றி அர்ஜுன் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம். எனவே இப்போது தான் தம்பி ராமையா மன நிம்மதியுடன் இருந்து வருகிறார்.

Also Read : அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. சமுத்திரகனி தம்பி ராமையா பிச்சு உதறிய ஹிட் படம்

Trending News