வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஆடியோ லான்சை கேன்சல் பண்ணிட்டோமே தமிழ்நாட்ட குடுத்துருங்க.. உதயநிதிக்கு அஜித் கொடுத்த பதிலடி மீம்ஸ்

Actor Ajith: நேற்று காலை முதலே லியோ பட விவகாரம் தான் சோசியல் மீடியாவை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. எப்ப எப்பன்னு இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஒட்டுமொத்த திரையுலகமும் இப்போது அது கேன்சல் ஆனதில் ஏமாற்றம் அடைந்து இருக்கிறது.

அதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் கொட்டி தீர்க்கின்றனர். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் அஜித் ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறுவது தான்.

Also read: விடாமுயற்சியில் நடிக்கும் விஜய்யின் அப்பா.. வெளிவந்த புகைப்படத்தின் காரணம் இதுதான்

அது சம்பந்தப்பட்ட பல மீம்ஸ்களை இப்போது சோசியல் மீடியாவில் நம்மால் பார்க்க முடிகிறது. அதில் உதயநிதி அஜித்திடம் அதான் ஆடியோ லான்சை கேன்சல் பண்ணிட்டோமே தமிழ்நாட்டை எங்ககிட்ட கொடுத்துடுங்க என்று கேட்கிறார். அதற்கு அவர் விஜய் என் நண்பன் அப்படியெல்லாம் தர முடியாது என்று கூறுவது போன்ற மீம்ஸ் ஒன்று உலா வருகிறது.

இதன் மூலம் தொழில் ரீதியாக நாங்கள் எவ்வளவு சண்டை போட்டாலும் பிரச்சினை என்று வந்துவிட்டால் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்வது போன்று இருக்கிறது. அதையே இப்போது அஜித் ரசிகர்களும் ஃபாலோ செய்து வருகின்றனர்.

Also read: நாலா பக்கமும் சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை.. தில்லாக சமாளிக்க ரெடியான லியோ

அந்த வகையில் ஆடியோ லான்ச் நடக்காததற்கு உதயநிதியின் அரசியல் தான் காரணம் என்று பலரும் வெளிப்படையாகவே கூறுகின்றனர். சில அரசியல் மற்றும் சினிமா விமர்சகர்கள் அதை உறுதிப்பட கூறி கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

உதயநிதிக்கு அஜித் கொடுத்த பதிலடி மீம்ஸ்

memes-ajith
memes-ajith

இப்படி பல சர்ச்சைகள் கிளம்பி வரும் நேரத்தில் இது போன்ற மீம்ஸ்களும் களைகட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் லியோவுக்கான ஆதரவும் ஒரு பக்கம் பெருகி கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு வெளிவர இருக்கும் இப்படம் நிச்சயம் சாதனை படைக்கும் என்பது மட்டும் உண்மை.

Also read: லோகேஷ், விஜய் மோதலால் வெடிக்கும் சர்ச்சை.. இமேஜை தொட்டு பார்த்ததால் வந்த வினை

Trending News