ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித்தின் அந்த படம் மாதிரி சஸ்பென்ஸ், திரில்லர் வேணும்.. விஜய் கண்டிஷனுக்கு தலையாட்டிய வெங்கட் பிரபு

பல படங்களில் வெற்றி கண்டு தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக வலம் வருபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்குள்ளே போட்டி இல்லை என்றாலும் இவர்களின் படத்திற்கு போட்டி போட்டு கொண்டு அலைமோதும் ரசிகர் கூட்டம் இருக்க தான் செய்கிறது. அந்த அளவிற்கு இவர்களின் படங்கள் எதிர்பார்ப்பை உண்டு படுத்தி வருகிறது.

இந்நிலையில் அஜித் பட சாயலில் விஜய் நடிக்க விரும்புவதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம் விஜய் தனக்கு ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார் வெங்கட் பிரபு.

Also Read: அசுர வளர்ச்சியில் தளபதி.. பிகில் முதல் தளபதி 68 வரை வாங்கிய சம்பளம், ரைடு மட்டும் போய்டாதீங்க சார்

மேலும் இவரின் ஒரு வரி கதையைக் கேட்டதுமே விஜய்க்கு பிடித்து போய் கால்ஷீட் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் ஒரு நிபந்தனையாக, இப்படத்தை ஷார்ட் டைம் படமாக நீங்கள் எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் விஜய். அதுவும் வெறும் 40 நாட்களிலேயே இப்படத்தை முடித்து விட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இது ஒரு விதத்தில் இயக்குனருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தன் கதைக்கு விஜய் ஒப்புக்கொண்டு விட்டார் என்பதில் மகிழ்ச்சி அடைந்து வருகிறார் வெங்கட் பிரபு. அவ்வாறு இருக்கையில் இப்படத்தை ஒரு அரசியல் சார்ந்த படமாக எடுக்க முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read: எதிர்பார்ப்பு இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. மனைவியிடம் குத்து சண்டை போட்ட விஷ்ணு

மேலும் இதை தொடர்ந்து இப்பணியை சஸ்பென்ஸ் ஆக காய் நகர்த்தி வருகிறார் இயக்குனர். 2011ல் இவரின் இயக்கத்தில், வெளிவந்த படத்தில் அஜித் கேங்ஸ்டர் ஆக நடித்து வெற்றி கண்ட படம் தான் மங்காத்தா. இப்படத்தை கண்டு விஜய் இம்ப்ரஸ் ஆகி தான் தற்போது இது போன்ற படத்தில் நடிக்க ஆசைப்பட்டு வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க மங்காத்தா 2 பற்றிய அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் விஜய்யின் இத்தகைய கட்டளையை இப்படத்தில் இவர் நிறைவேற்றுவாரோ என்ற சந்தேகத்தை முன் வைக்கிறது. மேலும் எதுவாக இருந்தாலும் விஜய்யின் நடிப்பில் இது போன்ற சஸ்பென்ஸ் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read: தளபதியின் காலை வாரிவிட்ட 5 சொதப்பலான இயக்குனர்கள்.. சூனியமாக மாறிய வருடம்

Trending News