விளம்பரமே இல்லாமல் வெளியிடப்பட்ட அஜித் மூவி.. தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருக்கும் வெங்கட் பிரபு!

Ajith’s movie released without ad and Venkat Prabhu is overjoyed this re-release: நல்லவர்கள்  கூடி போனால் நன்மைகளும் கூடி போகும்” என்ற கவிஞனின் வரியை மெய்ப்பிக்கும் வண்ணம் வெளிவந்ததுதான் அஜித்தின் 50 ஆவது திரைப்படம் மங்காத்தா.

சத்தம் இல்லாமல் வந்து பல சாதனைகளைப் படைத்த மங்காத்தாவின் பின்னால், பலரின் வழி நிறைந்த சோகபக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது.

இருந்த போதும் பல தடைகளை தாண்டி அளப்பரிய நினைவுகளை தாங்கி நிற்கிறது மங்காத்தா.

சென்னை 28  படத்தின் மூலம் தன்னை நிரூபித்த வெங்கட் பிரபு, அடுத்ததாக சரோஜா, கோவா படத்திற்கு பின்அஜித்துடன் மங்காத்தாவில் ஒன்று சேர்ந்தார். 

வெங்கட் பிரபு அஜித் கூட்டணியை உடைக்க பலவித வதந்திகளும் இவர்களிடையே பரப்பப்பட்டது.அஜித்திடம் வெங்கட் பிரபுவை பற்றி தாறுமாறாக கொளுத்தி போட்டனர்.

அவை அனைத்தையும் மீறி அஜித், வெங்கட்பிரபுவை நம்பி தனது கேரக்டருக்கு எதிர்மறையான கேரக்டர் என்று தெரிந்த போதும் தைரியமாக ஒத்துக் கொண்டார் மங்காத்தாவை.

யுவனின் இசையில் அதிரிபுதிரியாக, டாப் கியர் போட்டு பிச்சிகிட்டு போனது மங்காத்தா. படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு அரசியல் ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டது தயாரிப்பு  நிறுவனம்.

அனைத்திற்கும் சேர்த்து அஜித்தின் நல்ல உள்ளம் கண்டு, அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பச்சை கொடி காட்டவே!

சன் பிக்சர்ஸ் மங்காத்தாவை வாங்கி, எந்த ஒரு விளம்பரமும், போஸ்டரும் இல்லாமல்  அஜித்தின் மங்காத்தாவை இரவோடு இரவாக அதிரடியாக வெளியிட்டது .

2011 ஆகஸ்ட் 31ஆம் தேதி எந்த ஒரு பண்டிகையும் இல்லாத போதும், அஜித்தின் ரசிகர்கள் மங்காத்தாவை பண்டிகைக்கு நிகராக கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரையிட்ட அத்தனை காட்சிகளிலும் வசூல் சாதனை புரிந்தது மங்காத்தா.  இன்று வரை அஜித்தின் மங்காத்தா  தீம் மியூசிக்கையும், பின்னணி இசையையும்  அடித்துக் கொள்ள முடியவில்லை. 

ஏன்? யுவன் திரும்ப நினைத்தால் கூட இந்த மாதிரியான மியூசிக் போட முடியாது என்ற அளவு தரமான சம்பவத்தை செய்தது மங்காத்தா.

மே 1 ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா

இத்தனை சாதனைகளை தாங்கியுள்ள, அஜித்தின் “மங்காத்தா” மே 1 ரிலீஸ் ஆக உள்ளது. மங்காத்தா ரீ ரிலீஸ் ஆவதால், அது கோட் படத்திற்கு செம ரெஸ்பான்ஸாக இருக்கும் என்று கருதியுள்ளார் வெங்கட் பிரபு.

மேலும் தற்போது தளபதியின் கில்லி படம் மூவில் ரீ ரிலீஸ் ஆகி வசுலில் தெறிக்க விடுவதால், அதற்குப் போட்டியாக அஜித்தின் மங்காத்தா அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் ரசிகர்கள்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்