செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

போனி கபூருக்கு ஏற்பட்ட அவமானம்.. தாங்க முடியாமல் பைக்கில் சென்ற அஜித்

நடிகர் அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் H வினோத் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தையும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கிறார். போனிகபூர் வலிமை படத்திற்காக அதிக அளவு தொகையை பட்ஜெட்டாக செலவழித்தார்.

ஆனால் படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு வலிமை திரைப்படம் ஓடவில்லை. அஜித் ரசிகர்கள் பலர் இந்த படத்திற்கு நெகடிவ் கமெண்ட் கொடுத்து விட்டனர். இதனால் பொது ஜனங்கள் தியேட்டருக்கு வரவில்லை. இதனால் போனி கபூருக்கு மிகப்பெரிய லாஸ் ஆகிவிட்டது.

Also Read: ஏகே63-க்கு வெயிட்டான இயக்குனரை லாக் செய்த அஜித்.. விக்னேஷ் சிவனுக்கு அடுத்து இவர்தான்

இருந்தும் போனிகபூர் அஜித் மற்றும் வினோத்துடன் இணைந்து அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்து இருக்கிறார். முந்தைய நஷ்டத்தால் போனிகபூருக்கு கொஞ்சம் பணச்சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மதுரை அன்புவிடம் தான் போனி பணம் கேட்டு இருக்கிறார்.

இதை நம்பி பட வேலைகளும் ஆரம்பமாகி விட்டது. இந்நிலையில் திரைப்பட பைனான்சியர்கள் பலரது வீட்டில் ஐடி ரைடு நடந்தது. இதில் மாட்டிக்கொண்டவர் அன்பும் கூட, அதனால் அன்பு பைனான்ஸ் பண்ணும் அளவுக்கு அவரிடம் ஏதுமில்லை.

Also Read: அடுத்தடுத்து வெளிவரும் போட்டோவால், அஜித்திற்கு வெடித்த பிரச்சனை.. இப்படி எல்லாமா பண்றது

இதைத்தொடர்ந்து போனிகபூர் மிகப்பெரிய பணக்கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்து சூட்டிங் நடத்தக்கூட அவரிடம் பணம் இல்லை. இதை புரிந்து கொண்ட அஜித் போனியிடம் பணம் இல்லை என்று வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடும் என நினைத்திருக்கிறார்.

எனவே நடிகர் அஜித்குமார் டீசண்டாக படக்குழுவுக்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு, மஞ்சு வாரியருடன் சேர்ந்து பைக் ட்ரிப்புக்கு கிளம்பி விட்டார். இனி பணம் ரெடி ஆனால் தான் சூட்டிங் நடக்குமாம்.

Also Read: நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகர் ஏகே … பிராடு சிட்டிசன் அஜித் என்னும் ஹாஸ்டேக் டிரண்ட்

 

Trending News