வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடாமுயற்சிக்குப் பிறகு அஜித் இணையும் மாஸ் கூட்டணி.. மீண்டும் சென்டிமென்டில் சிக்கிய ஏகே

Actor Ajith: விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் வாரிசு படத்திற்கு ஓரளவு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் துணிவு படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் வாரிசு முடிந்த கையோடு விஜய் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.

ஆனால் அஜித் தனது விடாமுயற்சி படத்தை தொடங்குவதில் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இப்போது விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பே முடிக்க போகும் நிலையில் தற்போது வரை விடாமுயற்சி படம் தொடங்காமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

Also Read : 20 வருடங்களுக்கு முன்பே அஜித் செய்த சம்பவம்.. விஜய் கல்வி விருதுக்கு பதிலடி கொடுத்த ஏகே ஃபேன்ஸ்

இந்த சூழலில் அஜித் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் இறங்கி விட்டார். அதன்படி விடாமுயற்சிக்கு பிறகு சிறுத்தை சிவாவுடன் கூட்டணி போட இருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் விஸ்வாசம், விவேகம் போன்ற படங்கள் உருவாகி இருந்தது. எப்போதுமே அஜித்துக்கு வி செண்டிமெண்ட் உள்ளது.

ஆனால் இப்போது ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்தும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை. ஆனால் சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வி சென்டிமென்ட் வைத்தால் கண்டிப்பாக ஒர்க்அவுட் ஆகும். அதுமட்டுமின்றி இப்போது புதிய இயக்குனர்களை நம்பினால் நமக்கு வேலை ஆகவில்லை.

Also Read : கமல் சூதானமாய் வேண்டாம் என தூக்கி எறிந்த 5 இயக்குனர்கள்.. அஜித் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா

ஆகையால் ஏற்கனவே நன்கு தெரிந்த சிறுத்தை சிவா உடன் கூட்டணி போடலாம் என்ற திட்டத்தில் அஜித் இறங்கி இருக்கிறாராம். எனவே அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் ஏகே 63 படம் உருவாக உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ளதாம்.

மேலும் சிறுத்தை சிவா தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை முடித்த கையோடு அஜித்தின் படத்தை இயக்க இருக்கிறார். அதற்குள்ளாகவே அஜித்தும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முழு வீச்சாக ஷூட்டிங்கை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆகையால் மீண்டும் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணி இணைய உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

Trending News