வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் போட்டோ.. விடாமுயற்சிக்காக ஏங்கி கிடக்கும் திரையுலகம்

Ajith Recent Photo: துணிவு படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை விடாமுயற்சி படம் தொடங்காமல் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் படுபயங்கரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

லியோ படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தளபதி 68 படம் தொடங்க இருக்கிறது. இவ்வாறு விஜய் அடுத்தடுத்த படத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அஜித்துக்கு விடாமுயற்சி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

Also Read : யாருக்கும் அடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்ட கார்த்தி.. முதல் முதலாக அஜித் படத்தில் கம்பேக்

அதுமட்டுமின்றி லியோ பாடல் வெளியானதால் இணையத்தில் தினமும் விஜய் ட்ரெண்ட்டாகி கொண்டு இருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது அஜித் எப்போதுமே வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கக் கூடியவர். அந்த வகையில் வெளிநாட்டில் இருக்கும்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. மேலும் விடாமுயற்சி படத்திற்காக தற்போது தன்னுடைய எடையை அஜித் குறைத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Also Read : தலையில குடுமி, கையில துப்பாக்கி.. டெரர் லுக்கில் அஜித், இணையத்தை கலக்கும் விடாமுயற்சி போஸ்டர்

ஆனாலும் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் உள்ளது. ஏனென்றால் விடாமுயற்சி படம் தற்போது வரை தொடங்காத நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் உள்ளனர். கண்டிப்பாக இந்த ஆண்டு விடாமுயற்சி படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் போட்டோ

ajith-cinemapettai
ajith-cinemapettai

ஆகையால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கினால் அடுத்த ஆண்டு முதல் பாதியிலாவது விடாமுயற்சியை வெளியிடலாம். ஆகையால் அஜித், லைக்கா மற்றும் மகிழ்திருமேனி எந்த முடிவில் இருக்கிறார்கள் என்பது விரைவில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் விரைவில் விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் கிடைக்கிறதா என்பதை பார்க்கலாம்.

விடாமுயற்சிக்காக ஏங்கி கிடக்கும் திரையுலகம்

ajith-cinemapettai
ajith-cinemapettai

Also Read : விஜய்யின் அரசியலை குறிவைத்து தட்டித் தூக்க நினைக்கும் அஜித்.. அடுக்கடுக்காக போட்டு இருக்கும் மாஸ்டர் பிளான்

Trending News