அஜித்தை குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொன்ன பத்திரிக்கையாளர்.. மன்னிக்க முடியாத அளவிற்கு கொடுத்த பதிலடி

Ajith : அஜித்தை பற்றி ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்கள் வந்ததுண்டு. பத்திரிக்கையாளர்களிடம் ஏதாவது பேசினால் அது சர்ச்சையில் தான் முடிந்தது. இதனால் தான் ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையே அஜித் தவிர்த்து வந்தார்.

இந்த சூழலில் அஜித்துக்கு ஆண்மை இல்லை என்று பத்திரிக்கையாளர் ஒருவர் எழுதிய நிலையில் அவருக்கு பதிலுக்கு அஜித் என்ன செய்தார் என்று பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு, மூன்று வருடங்கள் குழந்தை இல்லை. இதனால் பத்திரிக்கையாளர் விக்னேஷ் என்பவர் திரைச்சுவை என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார்.

பத்திரிக்கையாளருக்கு அஜித் கொடுத்த பதிலடி

அப்போது அஜித்துக்கு ஆண்மையில்லை என்று பத்திரிக்கையில் எழுதி உள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு பிறகு விக்னேஷுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடனடியாக 2.50 இலட்சம் பணம் கட்ட சொன்னார்கள்.

உடனடியாகவே அஜித் ஓடி வந்து அந்த பணத்தை கட்டினார். அப்போது அஜித்தின் பிஆர்ஓ உங்களைப் பற்றி தவறாக எழுதியவருக்கு ஏன் உதவினீர்கள் என்று கேட்டார். இது பழி வாங்குவதற்கான நேரம் இல்லை என்று அஜித் சொல்லி உள்ளார்.

அதோடு அவர் வலுவாக இருக்கும் போது தான் நாம் மோத வேண்டும். இப்போது அவரே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். நல்லபடியாக அவர் முதலில் மருத்துவமனையிலிருந்து வரவேண்டும் என்று அஜித் கூறியுள்ளார். தன்னைப் பற்றி தவறாக எழுதியவராக இருந்தாலும் அவருக்கு அஜித் ஓடிப்போய் உதவி செய்யும் குணம் உடையவராக இருந்திருக்கிறார்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்