திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பா பைக் ரேஸ் போல ஆச்சரியப்படுத்திய அஜித்தின் மகன்.. வைரல் புகைப்படம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் கவலையுடன் காத்திருக்கும் நிலையில் இவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகிறது.

துணிவு பட வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்தக்கட்ட படமான விடாமுயற்சி பல எதிர்பார்ப்புகளை முன் வைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஏரோ மாடலிங், பைக்கிங், துப்பாக்கி சுடுதல், ரேசிங் போன்ற பல ஸ்போர்ட்ஸ் பயிற்சிகளில் ஆர்வம் காட்டி வருகின்றார் அஜித்.

Also Read: விக்ரமுக்கு போட்டியாக வித்தை காட்டும் மாளவிகா.. தங்கலானை வைத்து போடும் மாஸ்டர் பிளான்

அதைத் தொடர்ந்து இவர் தன் மகனையும் விளையாட்டில் உற்சாகப்படுத்தி வருகிறார். அது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதைப் பார்க்கையில் தன் மகனையும் தன்னை போலவே அவர் மாற்றி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மேலும் தமிழ் சினிமா பிரபலங்களான அஜித் – ஷாலினி இவர்கள் இருவரும் கால் பந்து விளையாட்டில் தன் மகனான ஆத்விக்கின் இத்தகைய முயற்சிக்கு பக்கபலமாக இருந்து வருவது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மேலும் குட்டி அஜித்தின் இத்தகைய புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பயும் பெற்று வருகிறது.

Also Read: மொத்தத்தையும் அஜித்திடம் புட்டு புட்டுவைத்த லைக்கா.. இடியாப்ப சிக்கலால் தத்தளிக்கும் விடா முயற்சி

அதைத்தொடர்ந்து ஆத்விக்கின் புகைப்படத்தை கொண்டு குட்டி ரெனால்டோ மாதிரி குட்டி தலயும் விளையாடுவதாக அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுபோன்று பிரபல நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் சாதித்தது பெரிதும் பேசப்பட்டு வந்தது.

அதேபோன்று கால்பந்து விளையாட்டில் அஜித்தின் மகன் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பையும் முன்வைக்கின்றனர் ரசிகர்கள். மேலும் அஜித்தின் மகன் ஆத்விக்கின் இத்தகைய ஆர்வத்தை கண்டு அப்பாவிற்கு தப்பாமல் மகன் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

அப்பாவைப் போல மகன்

ajith - aadvik
ajith – aadvik

Also Read: முளைக்கும் முன் பறக்க ஆசைப்படும் ஜெய் பீம் மணி.. விஜய் சேதுபதியை வைத்து கோடிகளுக்கு குறிவைக்கும் குறட்டை தம்பி

Trending News