Ajith’s three mega hit films to be re-released soon: இன்றைய சூழலில் திரையரங்குகளில் வாரந்தோறும் புது படங்கள் இறங்கினாலும் மற்ற மொழியில் ஹிட்டான படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வந்தாலும் ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
திரையரங்கு உரிமையாளர்களும் அதிக பட்ஜெட் கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு கல்லா கட்டுவதை விட இந்த ரீ ரிலீஸ் படங்கள் தகுந்த லாபத்தை கொடுப்பதால் வாரம் தோறும் முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது.
90ஸ் கிட்ஸ் கொண்டாடிய படங்களை இன்று 2கே கிட்ஸ் ஆர்வமுடன் பார்த்து ரசிப்பதுடன் இதில் வரும் பாடல்களை திரையரங்குகளில் ஒரு குட்டி கான்செட் போல் ஒன்றாக சேர்ந்து பாடி அமர்க்களப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரிலீஸ் ஆகும் அஜித்தின் மூன்று மெகா ஹிட் படங்களை காணலாம்
ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனுடன் முதன்முறையாக கைகோர்த்து சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் தன்னை எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளிப்படுத்தி காதலால் கசிந்துருகிய திரைப்படம் தான் என்னை அறிந்தால். அஜித், அருண் விஜய், திரிஷா, அனுஷ்கா இவர்களின் கூட்டணியில் காவல், காதல், நட்பு, ஆக்சன் அனைத்தையும் கலந்து தல ரசிகர்களை அசர வைத்த திரைப்படம் என்னை அறிந்தால்.
24 ஆண்டுகளுக்குப் பின்பு ரீ ரிலீஸ் ஆகும் வாலி, இயக்குனராக எஸ் ஜே சூர்யாவை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அஜித் மற்றும் சிம்ரனுக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றும் மவுசு குறையாது சென்னையில் மட்டுமல்லாது செங்கல்பட்டு திருச்சி போன்ற இடங்களிலும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. முரட்டு சிங்கிளாக இருக்கும் வாலிபர்கள் கூட படத்தின் பாடலை கேட்டு ஹைப் ஆகி விடுகின்றனர்
தல ரசிகன் என பெருமைப்படும் அளவிற்கு அத்தனை அம்சங்களும் ஒரு சேர அமைந்த கேங்ஸ்டர் திரைப்படமே மங்காத்தா. மேக்கிங் மற்றும் சேச்சிங் அருமையாக அமைந்து ரீமேக்கான பில்லா திரைப்படத்தை விட நூறு மடங்கு அற்புதமாக வந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அஜித்தின் மங்காத்தா. இத்திரைப்படம் கோடைவிடுமுறையை ஒட்டி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
Also read: அஜித்தை தப்பா பயன்படுத்திய மீடியாக்கள்.. ஒட்டும் உறவும் வேண்டாம்னு AK இருப்பதன் பின்னணி