வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

துணிவு பட நடிகர் அகால மரணம்.. அடுத்தடுத்த சோகத்தால் பதறும் திரையுலகம்

Thunivu Actor Passed Away: சில தினங்களுக்கு முன்பு அமீர்கான் நடித்த தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்னாகர் தன்னுடைய 19 வயதில் மரணம் அடைந்தார். மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த உயிரிழப்பை தொடர்ந்து தற்போது மற்றொரு நடிகரும் இயற்கை எய்தி உள்ளார்.

அஜித்தின் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியடைந்த துணிவு படத்தில் நடித்திருந்தவர் தான் ரித்துராஜ் சிங். ஏகப்பட்ட டிவி தொடர்களில் நடித்திருக்கும் இவர் பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

இவர் துணிவு படத்தில் வில்லன்களுள் ஒருவராக நடித்திருப்பார். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் மூன்று வில்லன்களில் உள்ளாடையுடன் அஜித்திடம் சிக்கும் கேரக்டரில் இவர் நடித்திருப்பார். 59 வயதாகும் இவருக்கு கணையத்தில் பிரச்சனை இருந்திருக்கிறது.

Also read: 19 வயது தங்கல் பட நடிகை திடீர் மரணம்.. காரணத்தைக் கேட்டு பதறும் திரையுலகம்

அந்த பாதிப்பின் காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் இரண்டு வார காலம் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஆனாலும் நேற்று முதலே இவர் உடல்நிலை கொஞ்சம் சோர்வாக இருந்திருக்கிறது.

ரித்துராஜ் சிங்

rituraj singh
rituraj singh

அதைத்தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்து இருக்கிறது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவருடைய மரணத்திற்கு தற்போது திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: தூக்கிவிட்ட நண்பன் சாவுக்கே வரல கேப்டன் எல்லாம் எம்மாத்திரம்.. ஊருக்கு தான் உபதேசமா? அஜித் செய்தது சரியா!

Trending News