வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புர்ஜ் கலீபாவை குறி வைக்கும் துணிவு படக்குழு.. டிசம்பர் 31 நடக்கப்போகும் தரமான சம்பவம்

நடிகர் அஜித்துக்கு வலிமை திரைப்படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆக போகும் திரைப்படம் துணிவு. முந்தைய படங்கள் போல் இல்லாமல் துணிவு படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இதற்கு காரணம் எட்டு வருடங்களுக்கு பின் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தான். இதனால் இருதரப்பிலிருந்தும் ஏகப்பட்ட ப்ரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத அளவிற்கு துணிவு படத்திற்கு இம்முறை பயங்கரமாக ப்ரோமோஷன் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் துணிவு படத்திற்கு ப்ரோமோஷன் செய்யப்பட்டது. அந்த வீடியோவை படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

Also Read: பீதியைக் கிளப்பிய வலிமை, பீஸ்ட்.. வாரிசு படத்தால் திருப்தி அடையாத விஜய்

அதனை தொடர்ந்து இப்போது மீண்டும் மற்றுமொரு ப்ரமோஷன் வேலைக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள் துணிவு படக்குழுவினர். புர்ஜ் கலீபா இதுதான் துபாயில் உள்ள உயரமான கட்டிடம். 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் உயரமுள்ள கட்டடமாகும். இப்பொழுது டிசம்பர் 31-ஆம் தேதி இங்கே ஒரு தரமான சம்பவத்தை செய்ய தயாராகி கொண்டிருக்கிறது துணிவு படக்குழு.

இந்த கட்டிடத்தில் படத்தின் புரமோஷனை நடத்த திட்டமிட்டுள்ளது. முக்கியமான நாட்களில் புர்ஜ் கலீபாவில் மூணு நிமிஷம் புரமோஷன் பண்ணுவதற்கு ஆறு லட்ச ரூபாயாம். அங்கே டிராபிக் எல்லாம் கிளியர் பண்ணி முக்கியமான நேரத்தில் படத்தின் புரமோஷனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த கட்டிடத்தின் வழியாக படத்தை ப்ரமோஷன் செய்தால் உலகளவில் ரீச் கிடைக்கும் என திட்டமிட்டுள்ளனர்.

Also Read: வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

உலகளவில் ரீச் கிடைப்பதால் மூலம் துணிவு படத்தின் பிசினஸ் எகிறும் என்பது துணிவு படக்குழுவின் பிளான் . அதனால் தான் இப்பொழுது புர்ஜ் கலீபாவை குறிவைத்து துணிவு படக்குழு பிரம்மாண்ட புரமோஷனுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த ப்ரோமோஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை விஜய் மற்றும் அஜித் இருவருமே தங்களுடைய படங்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகிறார்கள். இந்த முறை ஒருவரை ஒருவர் மிஞ்சி விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால் தான் ப்ரமோஷன் வேலைகள் தட புடலாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து துணிவு துபாய் ப்ரமோஷன் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன.

Also Read: எனக்கு இருக்கும் ஒரே டாஸ்க் இதுதான்.. அஜித் ஏகே 62 படத்தைப் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்

Trending News