வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்க்கு பதிலடி கொடுத்த அஜித்தின் டயலாக்.. அட இதுல இவளோ விஷயம் இருக்கா?

புது வருடம் ஆரம்பிச்சாச்சு இந்தாண்டு தொடக்கத்திலேயே தமிழ் சினிமாவின் தூண்களான தல, தளபதியின் வாரிசு, துணிவு உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. இதனிடையே அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் நேற்று மாலை துணிவு படத்தின் ட்ரைலரை ஜீ ஸ்டுடியோஸின் யூடியூப் சேனலில் வெளியாகி இணையத்தை பட்டையை கிளப்பி வருகிறது.

படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போதுவரை 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்னாக உள்ளது. அப்படி மாஸான இப்பட ட்ரைலரின் ஆரம்பத்தில் பல வகையான துப்பாக்கிகளுடன் பிரிட்டிஷ் காலத்து வங்கியை போன்ற கட்டமைப்புடன் அஜித்தின் வெறிக்கொண்ட கண் பார்வையில், துப்பாக்கி சுடும் சத்தத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.

Also Read: ரக ரகமாக துப்பாக்கிகளுடன் விளையாடிய அஜித்.. புத்தாண்டு ட்ரீட்டாக அனல் தெறிக்கும் துணிவு டிரெய்லர்

துணிவு படத்தின் ட்ரைலர் முழுவதும் ஆக்ஷன் மாஸ் காட்சிகளுடன் அஜித் கையில் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்து உலாவும் வண்ணம் உள்ளார். வெள்ளை சட்டை, வெள்ளை தாடி, வெள்ளை மீசை, வெள்ளை முடி என அஜித்தின் லுக் வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையனாக வலம் வரும் அஜித் வில்லத்தனமான புன்னகையுடன் தெறிக்கவிட்டிருக்கிறார்..

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறியே உனக்கு வெக்காம இல்லையா என்ற கேள்விக்கு அஜித், முகமூடி கழட்டி சிரித்துக்கொண்டே இல்லை என்று சொன்னது தான் அல்ட்டிமேட் எனலாம். இப்படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியார் துப்பாக்கியுடன் அஜித்தின் கூடவே வலம் வருகிறார். அஜித் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே ஆடும் நடனம் புதுமையாகவும் இணையத்தை ட்ரெண்டாகியும் உள்ளது.

Also Read: வாரிசை விட மிகக் குறைவான நேரத்தில் முடிக்கப்பட்டது துணிவு.. ஆபத்தாக அமையும் நெடு நீளப் படங்கள்

செண்டிமெண்ட், சோகம் என எந்த காட்சியும் இந்த ட்ரைலரில் இடம்பெறவில்லை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் நிலையில், பழைய பில்லா அஜித்தை டபுள் மடங்கு நம் கண்முன் கொண்டு வந்துள்ளார். சமுத்திரக்கனி ,பிரேம் உள்ளிட்ட பல பிரபலங்கள் துணிவு ட்ரைலரில் இடம்பெற்றுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் உள்ள கடலில், கப்பலில் அஜித் மற்றும் மஞ்சு வாரியார் செல்லும் காட்சிகள் அக்க்ஷனுடன் இடம்பெற்றுள்ளது.

ஏ.கே 47 என்ற யுவனின் பின்னணி இசை ட்ரைலர் முழுதும் இடம்பெற்று பட்டையை கிளப்பியுள்ளது. என்ன மாறி ஒரு அய்யோக்கிய பைய மேல கை வைக்கலாமா என்ற அஜித்தின் வசனம் மங்காத்தா அஜித்தின் சாயலை சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. மொத்தத்தில் துணிவு பட ட்ரைலர் சரவெடியாக வந்து புத்தாண்டை குதூகலப்படுத்தியுள்ளது.

Also Read: துணிவிற்கு தன் வாயாலே விளம்பரம் செய்த தளபதி.. சத்தமில்லாமல் சந்தோசப்பட்டு வரும் அஜித்

Trending News