சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

‘V ‘ செண்டிமெண்ட்டில் அஜித்தின் சக்ஸஸ்.. தலையில் துண்டைப் போட்ட 4 படங்கள்

பொதுவாக சினிமாத்துறையில் நடிகர், நடிகைகள் , இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு செண்டிமெண்ட் உண்டு. உதாரணத்திற்கு 80ஸ் களின் தொடக்கங்களில் வந்த இயக்குனர்கள் அனைவரும் தங்கள் பெயரை ‘ப’ வரிசையில் வைத்துக் கொண்டனர். பாரதிராஜாவின் ஹீரோயின்களுக்கு R வரிசையில் பேர் வைக்கப்பட்டது.

தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் சமயங்களில் ரஜினிகாந்த் இமயமலை செல்வது கூட ஒரு செண்டிமெண்ட் தான். இப்படி தான் அஜித்துக்கு V செண்டிமெண்ட் திரைப்படங்கள். இந்த படங்கள் அஜித்துக்கு வெற்றியையும் வாங்கி கொடுத்து இருக்கின்றன, சறுக்கல்களையும் கொடுத்து இருக்கின்றன.

Also Read: இணையத்தில் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்.. இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துறது

அஜித்தின் V செண்டிமெண்ட் திரைப்படங்கள்:

வான்மதி: நடிகர் அஜித்குமாரும், நடிகை சுவாதியும் இணைந்து நடித்து 1996 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படம் வான்மதி. இந்த படத்தை இயக்கியவர் அகத்தியன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் அஜித்தும் இயக்குனர் அகத்தியனும் இணைந்து காதல் கோட்டை படத்தில் பணியாற்றினர்.

வாலி: 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ரிலீசான படம் வாலி. இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கு இது தான் முதல் படம் ஆகும். இந்த படம் 270 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்தது.

வில்லன்: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், மீனா, கிரண் நடித்த திரைப்படம் வில்லன். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். 6 கோடி பட்ஜெட்டில் உருவான அஜித்தின் வில்லன் திரைப்படம் 35 கோடி வசூல் செய்தது.

வரலாறு: அஜித் குமார் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு திரைப்படம் 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித், அசின், கன்னிகா ஆகியோர் நடித்திருந்தனர். AR ரஹ்மான் இசையமைத்திருந்தார். தீபாவளிக்கு ரிலீசான இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் மூவி ஆகும்.

Also Read: வாரிசு ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி.. எந்த அலப்பறையும் இல்லாமல் விலகிய அஜித்தின் AK61

வீரம்: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் வீரம். அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த குடும்ப திரைப்படம் ஆகும். 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 130 கோடி வசூல் செய்தது.

வேதாளம்: அஜித் மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைந்து பணியாற்றிய படம் வேதாளம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சுருதி ஹாசன், லட்சுமி மேனன் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

விவேகம்: மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம். ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பை பெற்ற இந்த படம் அஜித்திற்கு ஒரு பெரிய பிளாப்பாகவே அமைந்தது.

விஸ்வாசம்: விஸ்வாசம் 2019 ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படம். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்துடன் ரிலீஸ் ஆனதாலேயோ என்னவோ வெற்றி படமாக அமையவில்லை.

வலிமை: வலிமை ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 2022 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ஆகும். இந்த படத்தின் அப்டேட்டுகளுக்காக அஜித்தின் ரசிகர்கள் தவம் இருந்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால் இந்த படம் அஜித்திற்கு தோல்வி படமாகவே அமைந்தது.

Also Read: போனி கபூருக்கு ஏற்பட்ட அவமானம்.. தாங்க முடியாமல் பைக்கில் சென்ற அஜித்

- Advertisement -spot_img

Trending News