திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்னேஷ் சிவனை டீலில் விட்ட அஜித்.. உதயநிதி இயக்குனருடன் கைகோர்க்கும் ஏகே-62 காம்போ

அஜித் தொடர்ந்து மூன்று முறை வினோத்துடன் கூட்டணி போட்ட நிலையில் துணிவு படத்திற்கு பிறகு புதிய இயக்குனருடன் பணியாற்றலாம் என்று முடிவெடுத்திருந்தார். இதனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபகாலமாக இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் ஹீரோயினை தேடி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து அவர் விலகுவதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

Also Read : விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

அதாவது விக்னேஷ் சிவன் கதையில் சில மாற்றங்கள் செய்து வருவதால் உடனடியாக அஜித் படத்தை அவரால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் லைக்கா தயாரிப்பில் ஏகே 63 படத்தில் விக்னேஷ் சிவன் இணைவார் என கூறப்படுகிறது. இப்போது ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தையும் லைக்கா ப்ரொடக்சன் தான் தயாரிக்கிறது.

Also Read : லோகேஷ் LCUவில் AK?. ஒரே படத்தில் மோத போகும் அஜித், விஜய்

மகிழ்த்திருமேனி அருண் விஜய்யின் தடையறத் தாக்க, தடம் மற்றும் ஆர்யாவின் மீகாமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தடம் படம் அருண் விஜய்யின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனை ஆக அமைந்தது. இப்போது மிகக் குறுகிய காலத்திலேயே அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்புகள் மகிழ்த்திருமேனிக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படமும் ஒரு போலீஸ் அதிகாரி கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் மிக விரைவில் வெளியிட உள்ளது. ஆனாலும் விக்னேஷ் சிவன் இந்த வாய்ப்பை தற்போது நழுவ விட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : அட்லி செய்யப் போகும் அசுரவதம்.. விஜய், அஜித் காம்போவை வைத்து அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்

Trending News