திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இணையத்தில் ட்ரெண்டாகும் ஏகே 62 டைட்டில் போஸ்டர்.. கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த லைக்கா

அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் லைக்கா தற்போது வரை இந்த அறிவிப்பை வெளியிடாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் டைட்டில் உடன் அறிவிப்பை வெளியிடலாம் என்ற முடிவில் லைக்கா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏகே 62 படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியின் சமூக வலைதள பக்கத்திலிருந்து தொடர்ந்து இந்த படம் குறித்து சில அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரமான டெவில் தான் ஏகே 62 படத்தின் டைட்டில் என்று ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read : அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

அதில் அனிருத் இசையமைப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்வதாகவும் போடப்பட்டிருந்தது. இதனால் துணிவு படத்தை போல் ஏகே 62 படத்திலும் அஜித் டெவில் போல் மாஸ் காட்ட உள்ளார் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த போஸ்டர் முற்றிலும் வதந்தியாம்.

மேலும் மகிழ்திருமேனியின் சமூக வலைத்தள பக்கத்தில் வரும் அனைத்து செய்தியுமே முற்றிலும் பொய் என்று கூறப்படுகிறது. அதாவது அஜித்தை போலவே மகிழ்திருமேனியும் எந்த சமூக வலைதள பக்கத்திலும் இடம்பெறவில்லை என்பதை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மகிழ்திருமேனி நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடக் கூடாது.

Also Read : நல்ல ஒரு அந்தஸ்து இருந்தும் சினிமாவில் தோற்ற 6 இளசுகள்.. காணாமல் போன அஜித் தம்பி

படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும். சமூக வலைத்தளங்களில் ஏகே 62 படத்தை பற்றி வரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று லைக்கா தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

ஆனாலும் லைக்கா இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு இன்னும் நிறைய வதந்திகள் இணையத்தில் உலாவ இருக்கிறது. ஆகையால் இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல் ஏகே 62 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டால் ரசிகர்கள் குழப்பம் அடையாமல் இருப்பார்கள்.

ajith-ak62-title-poster

Also Read : துணிவுடன் கனெக்ட்டாகும் ஏகே 62 டைட்டில்.. மீண்டும் சம்பவம் செய்ய போகும் அஜித்

Trending News