Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

AK 64 ‘டேர் டெவில்’:ரசிகர்களைத் திணறடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் போட்டுள்ள மாஸ் பிளான்!

AK 64 ‘டேர் டெவில்’:ரசிகர்களைத் திணறடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் போட்டுள்ள மாஸ் பிளான்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டேர் டெவில்’ படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படம்,‘குட் பேட் அக்லி’படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் இரண்டாவது படமாகும்.

அஜித்தின் 64-வது படமான‘டேர் டெவில்’படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி,தனது பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில்,இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் பல சீன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,கேமராவை நேரடியாகப் பார்த்துப் பார்வையாளர்களிடம் அஜித் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த க்ளோஸ்-அப் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.இதன் மூலம் ஸ்கிரீனில் அஜித்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அவருடன் நேரடியாக பேசுவது போன்ற அனுபவம் கிடைக்கும் என்றும் பேசப்படுகிறது.

இருப்பினும், க்ளோஸ்-அப் காட்சிகள் குறித்த இந்தத் தகவலைப் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே,இதனைத் தற்போது வெளியாகியுள்ள சினிமா வட்டாரத் தகவலாகவே பார்க்க வேண்டும்.அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படம்,ரசிகர்களுடனான அஜித்தின் ஸ்க்ரீன் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமா?என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.