வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

AK 62 விற்கு வரிசைக்கட்டி நிற்கும் 5 இயக்குனர்கள்.. ரீமேக் கேட்டதற்கு புதுசா பண்ணுவோம் என கூறிய பழைய ஜாம்பவான்

அஜித்தின் துணிவு படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது கடந்த சில நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஏகே 62 படத்தை இயக்குவதற்கு போட்டி போட்டு 5 இயக்குனர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.

மகிழ் திருமேனி: தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய தடையறத் தாக்க, தடம், கலகத் தலைவன், போன்ற வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால் திடீரென்று அதில் மாற்றம் ஏற்பட்டு இப்பொழுது ஏகே 62 படத்தை இவர் இயக்கப் போவதில்லை என்று வெளியாகி உள்ளது. ஆனாலும் மகிழ் திருமேனி ஏதோ ஒரு நம்பிக்கையில் அஜித் கால் சீட் கொடுப்பார் என்று எதிர்பார்த்து வருகிறார்.

Also read: கதாநாயகி கிடைக்காமல் தினமும் ஒரு நடிகை அறிமுகம்.. AK62 படத்தில் இணையும் அடுத்த ஜோடி

விஷ்ணுவர்தன்: 2007 ஆம் ஆண்டு பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி அஜித் நடிப்பில் வெளிவந்தது. இந்த படம் அஜித்துக்கு மிகவும் ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது. இதுனாலையே அஜித்துக்கு விஷ்ணுவர்தன் மேல் அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இதன் விளைவாக இப்பொழுது ஏகே 62படத்தை விஷ்ணுவரதன் இயக்குவதற்கு அஜித் இடம் கேட்டிருக்கிறார்.

தரணி: ஆரம்பத்தில் சாதாரண இயக்குனராக வந்த இவர். அதன் பிறகு முன்னணி நடிகர்களை வைத்து தூள், கில்லி போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் படத்தை இயக்க ஆரம்பிக்கப் போகிறார். அதற்காக அஜித்திடம் கில்லி படத்துக்கு இணையாக ஒரு கதையை சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அஜித் கொஞ்சம் டைம் கேட்டு இருக்கிறார். இப்பொழுது அஜித்தின் முடிவிற்காக தரணி காத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

வெங்கட் பிரபு: 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம். இந்தத் திரைப்படம் அஜித்தின் 50-வது திரைப்படமாக வெளிவந்தது. இந்த திரைப்படம் அஜித்திற்கும், வெங்கட் பிரபுவுக்கும் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் அஜித்தின் ஏகே 62 படத்தை வெங்கட் பிரபு இயக்க தயாராக இருக்கிறார். மேலும் இந்த கதை மங்காத்தாவின் இரண்டாம் பாகம் கதையாக கூட இருக்கலாம். இதனால் ஏகே 62 ரீமிக்ஸ் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கே.எஸ் ரவிக்குமார்: 90s காலகட்டத்தில் இருந்தே இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் இவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது சம்பந்தமாக இவர் அஜித்திடம் கதை சொல்லி இருக்கிறார். அதற்கு அஜித், கே.எஸ் ரவிக்குமாரிடம் சூப்பர் ஹிட் ஆன படத்தை ரீமேக் செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் கே.எஸ் ரவிக்குமார் ஒரு புது கதையுடன் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: 22 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் நடிகை.. AK62-வில் நயனை நம்பாத விக்னேஷ் சிவன்

Trending News