Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்த ஒரே வரி கதையில் அஜித்தை மீண்டும் வளைத்து போட்ட ஆதிக்.. ரகடான ஃபேன் பாய் சம்பவம் ரெடி

இந்த ஒரே வரி கதையில் அஜித்தை மீண்டும் வளைத்து போட்ட ஆதிக்.. ரகடான ஃபேன் பாய் சம்பவம் ரெடி

அஜித்-ஆதிக் கூட்டணியில் வெளிவந்த குட் பேட் அக்லி எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இருந்தாலும் மீண்டும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதற்கு முந்திய படத்தில் வேலை பார்த்த அனைத்து டெக்னீசியன்களும் இந்த படத்தில் வேலை பார்க்க உள்ளனர். […]

அஜித்-ஆதிக் கூட்டணியில் வெளிவந்த குட் பேட் அக்லி எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இருந்தாலும் மீண்டும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதற்கு முந்திய படத்தில் வேலை பார்த்த அனைத்து டெக்னீசியன்களும் இந்த படத்தில் வேலை பார்க்க உள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார், சண்டை காட்சிகளுக்கு சுப்ரீம் சுந்தர், வேல்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை 280 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. அஜித் நடிக்கும் காட்சிகளை அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளனர்.

முக்கியமாக இந்த படத்தின் கதை Harbour Backdrop வைத்து தான் இருக்கும் இதைக் கூறி தான் ஆதிக் அஜித்தை வளைத்து போட்டுள்ளார். சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை 2 North மெட்ராஸ் கதை இதே போல ஹார்பர் மையமாக வைத்துதான் எடுக்க உள்ளனர்.

இந்த படமும் ஹார்பரில் நடக்கும் கடத்தல் அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள், எல்லையை தாண்டுவதால் கொல்லப்படும் மீனவர்கள் இதுபோன்ற ரகடான ஃபேன் பாய் சம்பவம் ரெடி பண்ணிட்டாராம். இந்த படத்திற்காக அஜித்திற்கு மட்டும் 170 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் கார் ரேசிங் முடித்துவிட்டு படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்கிறார். அடுத்த வருட சம்மரில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

குட் பேட் அக்லி பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஆதிக் மீது முழு நம்பிக்கை வைத்து அஜித் இந்த வாய்ப்பை மீண்டும் கொடுத்துள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது 500 கோடி வசூல் ஈஸியாக தொட்டு விடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.