வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா.. சென்டிமென்ட்டாக வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Atharvaa: அதர்வா தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் டிஎன்ஏ உட்பட இன்னும் சில படங்களும் அவர் கைவசம் இருக்கிறது.

atharvaa
atharvaa

இந்நிலையில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் நடிக்கப் போகும் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது இந்த டீசர் வெளியீட்டு விழா பிரபல கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதில் படத்தின் பெயர் என்ன என்பதை படகுழு அறிவித்திருக்கிறது.

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா

அதன்படி ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அதர்வாவுக்கு செண்டிமெண்ட் ஆக இருக்கும் வகையில் இப்படத்திற்கு இதயம் முரளி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களுடன் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் முரளிக்கு இன்று வரை அடையாளமாக இருக்கும் படம் தான் இதயம்.

தற்போது அவருடைய மகன் இந்த டைட்டிலில் நடிக்க இருப்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமன் இசையமைக்க டிராகன் பட நாயகி கயாடு லோஹர், ரக்சன், ஏஞ்சலின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News