விளம்பரத்தால் மானத்தை இழந்து பரிதவிக்கும் அக்ஷய்குமார்.. தலைவிரித்து ஆடும் பண ஆசை

பாலிவுட்டில் மூன்று கான்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளமும், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் கொண்ட நாயகன் அக்ஷய் குமார். தமிழில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயம். கிட்டத்தட்ட படத்திற்கு 45 முதல் 60 கோடி வரை சம்பாதிக்கும் அக்ஷய் குமார் படங்களில் நடித்து சம்பாதித்த அளவிற்கே விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கான சம்பாதித்துள்ளார்.

பாக்கு நிறுவனமான விமல் இளாச்சியின் விளம்பரங்களில் முதலில் அஜய் தேவ்கன் நடித்தார். பின்னர் அவருடன் இணைந்து ஷாருக்கானும் நடித்த விளம்பரம் அடிக்கடி ஹிந்தி மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. தற்போது அதன் புதிய விளம்பரத்தில் நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து அக்ஷய் குமாரும் தோன்றியுள்ளார்.

ஏற்கனவே எதிர்ப்பைக்கைலை உண்டாக்கியிருந்த விளம்பரத்தில் அக்ஷய் குமார் நடித்த விளம்பரம் பாலிவுட் வட்டாரங்களில் பெறும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அக்ஷய் குமாரை குறி வைத்து பல மீம்ஸுகளை பரப்பி வந்துள்ளனர். புகையிலை பொருட்களுக்கு ஆதரவு கொடுத்து நடித்துள்ளார் அக்ஷய் குமார் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்ஸுகள் குவிந்தன. கடந்த சில நாட்களாகவே இது தொடர்ந்து வந்துள்ளது. தற்போது அது குறித்து நடிகர் அக்ஷய் குமார் பேசியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிரங்கமாக ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டு போட்டுள்ள போஸ்ட் டிரெண்டாகி வருகிறது. அதில், ஆரம்பத்திலேயே ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என தொடங்கி தனது விளக்கத்தை அக்ஷய் குமார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நல்லாவே புரிகிறது. ஒருபோதும் நான் புகையிலை பொருட்களை ஆதரித்து நடித்தது இல்லை. இனிமேலும், நடிக்க மாட்டேன். சமீபத்தில் வெளியான விமல் எலாய்ச்சி விளம்பரத்தில் நடித்ததற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல், அது போன்ற விளம்பரத்திலும் நான் நடிக்க மாட்டேன் என உறுதியளிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார் மன்னிப்பு கோரிய நிலையில், அவரது ரசிகர்கள் அக்ஷய் குமாருக்கு பெரிய அளவிலான ஆதரவை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து அட்ரங்கி ரே படத்தில் நடித்திருந்த அக்ஷய் குமார் அடுத்ததாக பச்சன் பாண்டே படத்தை ரிலீஸ் செய்திருந்தார். விரைவில், பிருத்விராஜ், ரக்ஷா பந்தன், ராம் சேது, மிஷன் சிண்ட்ரெல்லா, ஓ மை காட் 2 மற்றும் செல்ஃபி என ஏகப்பட்ட படங்கள் அவரது கையிலுள்ளன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →