வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லிப் லாக்கில் புகுந்து விளையாடிய ரன்பீர், ராஷ்மிகா.. அனிமல் படத்தை பார்த்த ஆலியா பட்டின் ரியாக்சன் இதுதான்

Animal-Alia Bhatt: ரன்பீர் கபூர், ராஷ்மிகா ஜோடி இணைந்து நடித்த அனிமல் கடந்த 1-ம் தேதி வெளியானது. பாலிவுட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் முதல் நாளிலேயே 116 கோடிகளை வாரி குவித்து பலரையும் அசரடித்தது.

அதைத்தொடர்ந்து வார இறுதி நாளிலும் படத்தின் வசூல் லாபகரமாகவே இருக்கிறது. இத்தனைக்கும் படத்தை பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை தான் கொடுத்தனர். இதற்கு முக்கிய காரணம் படத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் தான்.

அது மட்டுமின்றி படத்தின் நீளமும் 3.21 மணி நேரமாக இருக்கிறது. இதனாலேயே சில நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ரன்பீர் கபூரின் மனைவி ஆலியா பட் படத்தை பார்த்து விட்டு கொடுத்த ரியாக்சன் தான் இப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: 3.21 மணி நேரம் பிளேடு போட்ட அனிமல் கல்லா கட்டியதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அந்த வகையில் அவர் அனிமல் படம் குறித்து பாராட்டியதோடு பட குழுவினர் அனைவரையும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில் ராஷ்மிகா படத்தில் அழகாக இருப்பதோடு நடிப்பும் அருமையாக இருப்பதாக கூறி இருக்கிறார். அதனால் நானும் உங்களுடைய க்ரஷ்மிகா க்ளப்பில் இணைந்து விட்டேன் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இப்படத்தில் ரன்பீர், ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரொம்பவே ஓவராக இருந்தது. அதிலும் லிப்லாக் காட்சியில் இருவரும் புகுந்து விளையாடியிருந்தனர். இதை பார்த்தும் கூட ஆலியா பட் ஒரு மனைவியாக பொறாமைப்படாமல் இயல்பாக எடுத்துக் கொண்டது ஆச்சரியம் தான்.

Also read: Animal Movie Review: 3.21 மணி நேரம் சூடு தாங்கியதா ரன்வீர் கபூரின் அனிமல்.? ஜவானை மிஞ்சினாரா முழு விமர்சனம்

Trending News