Aliya Manasa: உங்களை விட நாங்க எந்த விதத்திலும் குறைஞ்சவங்க இல்ல என்று வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு போட்டியாக சீரியல் நடிகைகளும் மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கான ரசிகர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை மற்றும் டான்ஸில் பின்னி பெடலெடுக்கும் நடிகை ஆலியா மானசாவிற்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டு வருகிறார்.
ஆனால் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பிறகு ஆலியா இனி நடிக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு வெயிட் போட்டு இருந்தார். அப்படிப்பட்ட இவர் தன்னுடைய கேரியரில் சாதித்து காட்ட வேண்டும் என்று ஒரு சவாலை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் 50 நாட்களில் 16 கிலோ எடையை குறைத்து அனைவரையும் வியக்கும் அளவிற்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.
முறைப்படி யோகா செய்து அதற்கேற்ற உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டு தொடர்ந்து விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி எடுத்து வந்தார். அத்துடன் மற்ற பெண்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக உடல் அமைப்பை மாற்றிவிட்டார். இந்த ஒரு விஷயத்திற்கு இவருக்கு பக்க பலமாக இருந்தது இவருடைய கணவர் சஞ்சீவ். அந்த வகையில் இருவருமே அன்பையும் காதலையும் பரிமாறிக் கொண்டார்கள்.
Also read: கொக்கி குமாரிடம் மாட்டிக் கொண்ட இனியா.. ஆக்ஷன் கிங் ஆக மாறிய விக்ரம்
அதனாலேயே தற்போது இரண்டு குழந்தைக்கு தாயான பின்பும் ஹீரோயினாக சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். இவரை பார்ப்பதற்கு இரண்டு குழந்தைக்கு அம்மா என்று சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு க்யூட்டாக இளமை மாறாத ஹீரோயின் லுக்குடன் வலம் வருகிறார். பொதுவாக சின்னத்திரையை பொருத்தவரை கல்யாணம் ஆகிவிட்டாலே சப்போர்ட்டிங் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைக்கும்.
அந்த வகையில் குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் என்றால் முழுக்க முழுக்க இவருடைய டெடிகேஷன் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இவருடைய ஃபேஷனாக நினைக்கும் டான்ஸிலும் முழு கவனத்தையும் செலுத்தி அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து விட்டார்.
50 நாட்களில் 16 கிலோ எடையை குறைத்த ஆலியா
Also read: சும்மாவே விக்ரம் காலில் சலங்கை கட்டுன மாதிரி ஆடுவாரு.. இதுல இனியா தோஸ்த் வேற