வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஒட்டுமொத்த கேரக்டர்களும் நடிப்பில் பின்னிய 4 படங்கள்.. கிராமத்தான் ஆகவே மாறிய யோகிபாபு

பொதுவாக ஒரு திரைப்படம் மக்களை கவர்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அந்தப் படத்தின் நடிகர்கள், பாடல்கள், கதை என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தில் நடித்த ஒட்டுமொத்த கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்த சில திரைப்படங்களும் இருக்கிறது.

ஏலே: ஹலிதா ஷமீம் இயக்கிய இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தந்தை, மகன் இருவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிமிகு போராட்டங்களைப் பற்றிய கதையாக இது இருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ஒரு சில தடைகளால் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை: விஜய் சேதுபதி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றிய கதை அம்சத்துடன் உருவான இந்த திரைப்படத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் ஒரு சிறப்பம்சமாக அங்கு வாழும் மலைவாழ் மக்களே இதில் நடித்திருப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் பிலிம் பெஸ்டிவலில் வெளியிடப்பட்டடு, பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியானது.

மண்டேலா: இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா நடிப்பில் உருவான திரைப்படம் மண்டேலா. தேர்தல் அரசியலை மையப்படுத்தி மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படத்தில் காமெடியனாக இருந்த யோகி பாபு ஒரு சிறந்த நாயகனாக அனைவரின் கவனத்தையும் பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இப்படம் முழுக்க யதார்த்தமான மனிதர்கள் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர். இந்தத் திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானது.

நரை எழுதும் சுயசரிதம்: ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் மணிகண்டன். அவரின் இயக்கத்தில் டெல்லி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மிக சில கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும், அந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தில் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது சோனி லைவ்வில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட திரைப்படங்களில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் கதையின் போக்கில் நாயகர்கள் ஆகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் தான் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் வெளியானது தான் வருத்தமான ஒன்று.

Trending News