வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பார்த்திபன் சொன்னது அத்தனையும் பொய்.. விவாகரத்துக்கான காரணத்தை உடைத்த சீதா

80, 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை சீதா தற்போது பல திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தன்னைப் பற்றிய விஷயங்களையும், சமையல், வீட்டு தோட்டம் போன்ற பலவற்றைப் பற்றியும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அவருடைய வீடியோவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் அவர் தன்னுடைய விவாகரத்துக்கான காரணத்தை பற்றியும், எப்படி பார்த்திபன் மேல் தனக்கு காதல் வந்தது பற்றியும் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். அதாவது சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன், சீதா அவருடைய காதலை என்னிடம் கூறும்போது நான் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தேன் என்று கூறியிருந்தார்.

Also read: பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை.. ரகசியத்தை போட்டு உடைத்த பாக்யராஜ்!

ஆனால் உண்மையில் பார்த்திபன் தான் சீதாவை முதலில் விரும்பி இருக்கிறார். இதை பற்றி கூறிய சீதா பார்த்திபன் என்னிடம் அடிக்கடி போன் செய்து அந்த மூன்று வார்த்தையை மட்டும் சொல் என்று கேட்பார். எனக்கும் அவர் மீது காதல் இருந்ததால் ஒரு முறை நான் ஐ லவ் யூ என்று கூறினேன். அப்போது என் அப்பா வேறு ஒரு போனில் இருந்து இதை கேட்டுவிட்டார்.

அதன் பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. மற்றபடி அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் ஒரு ஆண் குழந்தையையும் இவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

Also read: பார்த்திபன், பாண்டியராஜன் என வளர்த்து விட்ட பாக்யராஜ்.. ஒருவருக்கு மட்டும் நடந்த துரதிர்ஷ்டம்

அதன் பிறகு சீதா ஒரு சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. தற்போது தனிமையில் வசித்து வரும் அவர் தங்கள் விவாகரத்துக்கான காரணத்தையும் தெரிவித்து இருக்கிறார். பார்த்திபன் ஏற்கனவே சீதா தன்னிடம் அதிகமாக எதிர்பார்த்ததுதான் பிரிவுக்கு காரணமாக அமைந்தது என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அதேபோன்று சீதாவும் நான் என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்று வாழ்பவள் அதனால் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது. இப்படிப்பட்ட மன வருத்தத்தால்தான் நாங்கள் பிரிந்தோம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவர்களுடைய விவாகரத்து பற்றி இதுவரை ஏகப்பட்ட செய்திகள் வெளி வந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடை பற்றி கூறி சீதா அத்தனை செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also read: கடன் அடைக்க முடியாத நடிகை, தனியறையில் மானபங்கப்படுத்திய கொடூரம்.. உண்மையை படமாக்கிய பார்த்திபன்

Trending News