சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மலையாள ரசிகர்களை குறிவைக்கும் விஜய் சேதுபதி.. முக்கியமான நடிகரை ஓரம்கட்டிய புஷ்பா-2

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். அதுவும் வா சாமி எனும் பாடல் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

புஷ்பா படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி 350 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஒரே பாட்டில் புகழின் உச்சத்தைத்  தொட்டார் சமந்தா, அதாவது சமந்தா நடனமாடிய உ சொல்றியா மாமா பாடல்தான் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது அதுவும் சமந்தா நடனத்தை பார்ப்பதற்காக மட்டுமே ஏராளமான ரசிகர்கள் படத்திற்கு சென்றனர்.

புஷ்பா 2 பாகத்தின் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாஸில் இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் நடித்து இருந்தனர். அதனால் புஷ்பா 2ம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் சண்டை போடும் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்தனர்.

ஆனால் தற்போது புஷ்பா படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பகத் பாசிலுக்கு உயரதிகாரியாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இதனால் புஷ்பா படத்தில் பெரும்பாலும் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் சேதுபதி போதும் காட்சிகள்தான் இடம்பெற உள்ளன.

இதனால் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது பகத் பாசில் நடிப்பும் விஜய் சேதுபதி நடிக்கும் எந்த விதத்திலும் குறை கூற முடியாது. இருவரும் சிறப்பாக நடிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பகத் பாசில் கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் பெரும்பாலான ரசிகர்கள் பகத் பாசிலின் சண்டைக் காட்சியை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர்.

ஆனால் புஷ்பா படத்தை பொருத்தவரை விஜய் சேதுபதிக்கு எந்த அளவிற்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதோ அதேபோல் பகத் பாசிலுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக பதில் பகத் பாசிலின் அதிகமான காட்சியில் நடிப்பார் எனக் கூறி வருகின்றனர்.

Trending News