திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

அல்லு அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த அட்லி.. கையெடுத்து கும்பிட்டு, வழி அனுப்பிய சம்பவம்

விஜய்யை வைத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை இயக்கிய ஹிட் கொடுத்த காரணத்தினாலே அட்லீ இப்பொழுது மும்பையில் குடியேறி விட்டார் என்ற ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் இப்பொழுது ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் அவர் மும்பையில் இரண்டு வருடங்களாக இருந்து வருகிறார். அந்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அதன்பின் அட்லி இயக்கும் கதையை, தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து எடுக்கலாம் என்று ஒரு திட்டம் இருந்து வருகிறது.

அதன்படி அவர் அல்லு அர்ஜுனிடமும் அந்த கதையை சொல்லி அதுவும் அவருக்கு பிடித்துப்போகவே, அந்தப் படம் அவரே நடித்து தரவும் அல்லு அர்ஜுன் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த படத்தை அவரே முன்வந்து தயாரிக்கவும் இருந்துள்ளார்.

ஆனால் எல்லாம் ரெடியாகி வரும் நேரத்தில் அட்லி, அல்லு அர்ஜுனுடன் கிட்டத்தட்ட ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார். அவர் கேட்ட தொகை 35 கோடி, இவ்வளவு சம்பளத்தைக் கொடுக்க ஒரு தயாரிப்பாளராக அல்லு அர்ஜுன் விரும்பவில்லை.

இதை சற்றும் எதிர்பாராத அட்லி இந்தப் படம் அவ்வளவு செலவு செய்து எடுக்க வேண்டியது இல்லை. இந்த படத்திற்கு நீங்கள் இவ்வளவு சம்பளம் கேட்பது நியாயம் இல்லை என்று விரட்டி விட்டாராம்.

இப்பொழுது பேராசை பிடித்த அட்லி, என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கிறார். வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி அதிக சம்பளம் கேட்டு அனைத்தையும் பாழாக்ககி விட்டார் என்று சொல்லலாம்.

Trending News