வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2-வுக்கு இத்தனை கோடியா!

புஷ்பா படத்தில் தர லோக்கல் ஆக நடித்திருந்த தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகத்திற்காக டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்த படம் உலக அளவில் ரூபாய் 350 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டியது. இதன் தொடர்ச்சியாக இந்த படத்தில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பு புஷ்பா 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியது.

Also Read: புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

இதில், ‘காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்’ என்ற பஞ்ச் டயலாக்கை அல்லு அர்ஜுன் ஆக்ரோஷமாக பேசி பார்ப்போரை புல்லரிக்க வைத்தார்.

இந்நிலையில் புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. முதலில் புஷ்பா படத்தில் நடித்ததற்காக ரூபாய் 45 கோடி சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன், இரண்டாம் பாகத்திற்கு டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

Also Read: பத்து தலையில் பிரியா பவானி ஷங்கர் சம்பளம்.. ஒரு பாட்டு ஆடி பாதி சம்பளம் வாங்கிய சாயிஷா

அவர் புஷ்பா 2-விற்கு ரூபாய் 85 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். புஷ்பா படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டார் ஆகவே மாறிவிட்டார். இதனால் அவரது மார்க்கெட் இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டார். போகிற போக்கை பார்த்தால் புஷ்பா 2-வும் ஹிட் ஆக போகிறது. அதன் பின் அவரின் சம்பளம் 100 கோடியை தாண்டி விடும் என டோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

Trending News