சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரிலீஸ் தேதியுடன் வெளியான புஷ்பா 2 டீசர்.. வெறித்தனமாக இறங்கி வேட்டையாடும் அல்லு அர்ஜுன்

Pushpa 2 : சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருந்தது புஷ்பா தி ரைஸ் படம். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா படத்திற்காக கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.

இன்றைய தினம் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் புடவை அணிந்து பத்ரகாளி போல் மாறி வெறித்தனமாக வேட்டையாடுகிறார் அல்லு அர்ஜுன்.

கங்காம்மா கெட்டப்பில் அல்லு அர்ஜுன்

அவருடைய இந்த கங்காம்மா கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதுவும் இப்படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆகையால் படப்பிடிப்பை இப்போது தீவிரபடுத்தப் படக்குழு உள்ளனர்.

மேலும் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசர் அமைந்திருக்கிறது. இந்த டீசர் யூட்யூபில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது

Trending News