Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

​புஷ்பா 2-க்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மாஸ் பிளான்..புது அவதாரம் எடுக்கும் ஐகான் ஸ்டார்!

​புஷ்பா 2-க்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மாஸ் பிளான்..புது அவதாரம் எடுக்கும் ஐகான் ஸ்டார்!

டோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன்,தற்போது புதிய முயற்சி ஒன்றில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி,தெலுங்கு சினிமாவில் இருக்கும் இளம் இயக்குநர்கள்,புதிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தத் தகவல் தெலுங்கு திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.


நடிகராக மட்டுமல்லாமல்,சினிமாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை அவர் மேற்கொள்ள இருப்பதாகப் பேசப்படுகிறது.குறிப்பாக, திறமையான இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் வித்தியாசமான கதைகளையும் புதிய முயற்சிகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பது இந்தத் திட்டத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில்,அல்லு அர்ஜுனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு,அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும்‘ராக்கா’படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் அவர் இணையும் படம் குறித்த எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில்,நடிப்புடன் தயாரிப்பிலும் கவனம் செலுத்துவது சரியான முடிவா என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதலில் எதிர்பார்க்கப்படும் படங்களை முடித்துவிட்டு தயாரிப்பு முயற்சியில் இறங்கலாமே என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும்,இளம் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியாக இது அமைந்தால் தெலுங்கு சினிமாவுக்கு புதிய அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.