Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அல்லு அர்ஜனை ஆச்சரியத்தில் உறைய வைத்த மெழுகு சிலை.. துபாயில் அலப்பறை கிளப்பும் புஷ்பா!

அல்லு அர்ஜனை ஆச்சரியத்தில் உறைய வைத்த மெழுகு சிலை.. துபாயில் அலப்பறை கிளப்பும் புஷ்பா!

Allu Arjun’s wax statue unveiled at the museum in Dubai: ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் விறுவிறுவென ரெடியாகி வருகிறது. […]

Allu Arjun’s wax statue unveiled at the museum in Dubai: ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் விறுவிறுவென ரெடியாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு பல மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம்.

பான் இந்தியா மூவியாக ரெடியாகி வரும் புஷ்பா 2 வை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை ஒன்று துபாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பிரபலமானவர்களை கௌரவிக்கும் விதமாக மெழுகு சிலை வடிவமைத்து மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அச்சு அசலாக இருக்கும் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை

ஏற்கனவே  இங்கு அமிதாப் பச்சன்,  ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ரன்பீர் கபூர் போன்றவர்களின் சிலை  உள்ளது. தற்போது இந்த பெருமையை அல்லு அர்ஜுனும் தட்டி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலை திறப்பதற்காக துபாய் சென்றுள்ள அல்லு அர்ஜுனும் அவரது குடும்பத்தாரும் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்தது வைரலாகி வருகிறது.

மாடர்ன் புஷ்பா போல் முகத்துக்கு நேராக கையை வைத்து  க்யூட்டாக போஸ் கொடுக்கிறார் இந்த ஸ்டைலிஷ் ஸ்டார்.

ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடியாதது போல் அச்சு அசலாக அல்லு அர்ஜுன் போலவே சிலை வடிவமைத்தது அற்புதமாக உள்ளது. சிலையைப் பார்த்து புஷ்பாவே  ஆச்சரியத்தில் மிரண்டு விட்டார்.

 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.