புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஓவர் அலப்பறை பண்ணும் ஆலியா-சஞ்சீவ் ஜோடி.. சோசியல் மீடியாவில் வெறுப்பேத்தும் பப்ளிசிட்டி பைத்தியங்கள்

சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் பிரைவசி என்பது யாருக்குமே இருப்பதில்லை. அனைத்தையுமே கன்டென்ட்டாக மட்டுமே பார்க்கும் மனிதர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கூட மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். யார் எப்படி போனால் என்ன எனக்கு வியூஸ், லைக் மட்டும் தான் முக்கியம் என அட்ராசிட்டி செய்யும் சிலரும் இருக்கிறார்கள்.

அதிலும் இப்போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நடித்து சம்பாதிப்பது பத்தாமல் சோசியல் மீடியாவிலும் கல்லா கட்டி வருகின்றனர். அதிலும் தங்களுக்கென ஒரு சேனலை ஆரம்பித்து காலையில் எழுந்து பிரஷ் பண்ணுவது முதல் இரவு தூங்கும் நேரம் வரை அனைத்தையும் அவர்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர்.

Also read: ஓவர் ஆட்டம் போட்ட ஆலியா மானசா.. விஜய் டிவி விட்ட சாபத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை

இது எல்லாவற்றிலும் மேலாக பாத்ரூம், ஃப்ரிட்ஜ், பெட்ரூம் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வீடியோ எடுத்து காண்பிப்பது தான் பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறது. இப்படி அலப்பறை பண்ணும் எத்தனையோ பிரபலங்களை பார்த்திருக்கிறோம். ஆனாலும் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சஞ்சீவ், ஆலியா இருவரும் கொஞ்சம் அதிகமாகவே அலப்பறை கொடுப்பதாக பேசப்படுகிறது.

ஏனென்றால் பிரபலங்கள் பலரும் தங்கள் குழந்தைகளை மீடியாவின் முன் அதிகம் காட்ட மாட்டார்கள். அந்த புகழ் வெளிச்சம் அவர்களுடைய படிப்பு உள்ளிட்ட எதிர்காலத்திற்கு தடையாக இருக்கும். ஆனால் இந்த ஜோடி இப்போது குழந்தைகளை சோசியல் மீடியாவில் பிரபலப்படுத்தி வருவது சில விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஆலியாவுக்கு காலில் அடிபட்டு இருந்தது.

Also read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இருப்பினும் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இது வைரலான நிலையில் தற்போது அவருக்கு நடக்க இருக்கும் ஒரு சர்ஜரி பற்றி தெரிவித்த சஞ்சீவ் அதற்காக ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு இருக்கிறார். மேலும் அவர் தன் மனைவிக்கு சோகமாக முத்தம் கொடுக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் உங்களுக்கு பிரைவசியே கிடையாதா, எல்லாத்தையும் வீடியோவாக தான் போடுவீங்களா என்ற கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் எந்த அளவுக்கு வீடியோ போட்டு கடுப்பேற்றி வருகிறார்கள் என்று தெரிகிறது. இப்படி பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இந்த ஜோடி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்கள் வேலையை மட்டும் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

Trending News