வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சந்தியாவிற்கு டஃப் கொடுக்க போகும் ஆலியா.. பிரசவத்திற்கு பின் மகா சங்கமத்தில் ரீ-என்ட்ரி

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 இரண்டு சீரியல்களின் மகா சங்கமும் கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதால் இந்த வாரத்துடன் மகா சங்கமம் நிறைவடைகிறது. இதில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி உள்ளது.

அதில் பாரதி, ஹேமாவின் அம்மா என தன்னுடைய கல்லூரி காதலி ஹேமாவை வரைந்து காட்டுகிறார். பாரதியின் கல்லூரி காதலி ஹேமா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்திருந்தார். பிரசவத்திற்காக சென்ற ஆலியா, ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் தற்போது சந்தியா கேரக்டரில் ரியா நடித்துக்கொண்டிருக்கிறார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் கார் விபத்தில் ஆலியா மானசா இறந்து போனதாக காண்பித்து தற்போது மீண்டும் பாரதி அந்த கதாபாத்திரத்தை ஹேமாவிடம் அறிமுகப்படுத்தி சீரியலில் மீண்டும் ஆலியா மானசா என்ட்ரிக்கொடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்

பாரதி மற்றும் ஆலியா மானசா இருவரும் சென்றுகொண்டிருந்த காரை விபத்துக்குள்ளாகிய வெண்பா, அந்த விபத்தில் தான் பாரதிக்கு ஆண்மை இழந்ததாக அவரை நம்ப வைத்திருக்கிறார். எனவே ஆலியா மானசா பாரதிகண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுத்து பாரதியின் சந்தேகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்.

அத்துடன் கண்ணம்மா மற்றும் இரண்டு மகள்களையும் பாரதியுடன் சேர்த்து வைத்து இந்த சீரியலை முடித்துவிட போகிறார். இனி விறுவிறுப்பான அதிரடி திருப்பங்கள் அடுத்தடுத்து பாரதிகண்ணம்மா சீரியல் நிகழப்போகிறது.

மேலும் என்ட்ரி கொடுக்கும் ஆலியா மானசா நிச்சயம் மகா சங்கமத்தில் இருக்கும் சந்தியா மற்றும் கண்ணம்மாவிற்கு டஃப் கொடுக்கப்பதுடன் அவரது வருகையால் பாரதிகண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா கதிகலங்க போகிறார்.

Trending News