வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

புது சந்தியாவை அறிமுகம் செய்த விஜய் டிவி.. ஆயிரம் சொல்லுங்க நம்ம ஆலியா கிட்ட வர முடியாது

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. ஆரம்பத்தில் இத்தொடர் வரவேற்பு பெறவில்லை என்றாலும் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இத்தொடரில் சித்து சரவணன் கதாபாத்திரத்திலும், சந்தியாவாக ஆலியா மானசாவும் நடித்து வருகிறார்கள்.

இத்தொடரின் முதல் சீசன் ராஜா ராணி தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஜோடியாக நடித்தனர். இத்தொடரில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஐலா சையத் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில் ஆலியா ராஜா ராணி 2வில் கதாநாயகியாக நடித்து வந்தார். தற்போது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறக்க உள்ளதால் இத்தொடரில் இருந்து ஆலியா விலகியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

தற்போது சுவாரஸ்யமான கதை களத்துடன் வரும் ராஜா ராணி 2 தொடரில் இனி யார் சந்தியாவாக நடிக்கப் போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 தொடரின் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆலியாவே சந்தியாவாக இனி இவர் என்று நடிகை ரியாவை அறிமுகம் செய்து வைக்கிறார்.

ராஜா ராணி 2 தொடர் கிட்டதட்ட 900 எபிசோடுகளை தாண்டிய பிறகு ஹீரோயினி மாத்தி இருப்பதால் ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கு முன்னதாக பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியை மாற்றியதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி இருந்தனர்.

இதனால் தொடர்ந்து விஜய் டிவி தொடர்களில் இருந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மாறுவது விஜய் டிவியின் டிஆர்பி குறைய வாய்ப்புள்ளது. இதனால் விஜய் டிவி தன் சீரியல்களில் புதிய டுவிஸ்ட்களை வைத்து தனது டிஆர்பியை தக்கவைத்துக்கொள்ள புது யுக்தியை கையாள வாய்ப்பு உள்ளது.

Trending News