Amala Paul: தென்னிந்திய நடிகைகளில் அதிக சர்ச்சைக்கு பேர் போன நடிகைகளில் அமலாபாலும் ஒருவர். எல்லோருக்கும் ஒரு படம் ஹிட்டாகி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும்போது தான் சர்ச்சைகளும் சேரும். ஆனால் அமலா பாலுக்கு அறிமுக படமே சர்ச்சை தான்.
சிந்து சமவெளி தொடங்கிய ஆடை படம் வரை நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இவருக்கு வந்தது. அது மட்டுமில்லாமல் இயக்குனர் AL விஜய் உடன் திருமணமாகி விவாகரத்து பெரும்போது கூட கண்டிப்பாக இருக்கு அமலா தான் காரணமாக இருப்பார் என சாமானிய மக்கள் கூட அடித்து சொல்லும் நிலையில் தான் அமலா பால் மீதான பார்வை இருந்தது.
அதன் பின்னர் பஞ்சாபி ஒருவருடன் காதலில் இருப்பதை உறுதி செய்யாமல் அதன் பின்னர் அவருடன் பிரேக் அப் செய்து கொண்டார். ஆடை என்னும் படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமா ஒத்து வராது என தெரிந்து தன்னுடைய ஒட்டுமொத்த கவனத்தையும் வித்தியாசமான இடங்களுக்கு பயணம் செய்வதில் செலுத்தினார். சமீபத்தில் ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதை உறுதி செய்த அமலா திருமணமும் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருப்பதையும் ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார். அமலாபால் மீது எவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அவர் தாய்மையை கொண்டாடும் விதம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
நிறைமாத கர்ப்பிணியாக அவர் எடுக்கும் போட்டோ ஷூட்கள் கூட பயங்கர பாராட்டுகளை பெற்று வருகிறது. பச்சை கலர் கவுன் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் அமலா பால் அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த புகைப்படத்துடன் ஒரு பூ எப்படி பூப்பதற்கு காத்திருக்கிறதோ அதைப்போல் நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார் அமலா பாலின் பதிவிற்கு நன்றிகள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள் சர்ச்சைகளை தாண்டி தாய்மையில் ஜெயித்து விட்டார் மைனா பட நாயகி.
கர்ப்பத்திற்கு பின் அமலா பால் வெளியிட்ட கியூட் போட்டோக்கள்