Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம்.. அமலா பாலின் வெளிப்படையான பேட்டி

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம்.. அமலா பாலின் வெளிப்படையான பேட்டி

Amala Paul : கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் சில நடிகைகள் தான் நடித்து வருகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா போன்ற வரிசையில் அமலாபாலும் இது போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருடைய மைனா படம் மிகப்பெரிய வரவேற்பை […]

Amala Paul : கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் சில நடிகைகள் தான் நடித்து வருகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா போன்ற வரிசையில் அமலாபாலும் இது போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருடைய மைனா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதேபோல் காடவர் படத்தில் துணிச்சலாக நடித்திருந்தார். இந்த சூழலில் அவர் தனியார் யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த நிலையில் தன்னுடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பேசி இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் ஏஎல் விஜய் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அமலாபால் வெளியிட்ட ரகசியம்

கல்யாணமான சில மாதங்களிலேயே அமலா பாலுக்கு இலை என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழலில் சமீபத்தில் அமலாபால் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தனது மகனை பற்றி பேசி இருந்தார்.

அதாவது தன்னுடைய மகனின் வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கெல்லாம் சுத்தமாக பொறுமையை கிடையாது. ஆனால் இலை வந்த பிறகு நான் இவ்வளவு பொறுமையாக இருப்பேனா என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் நான் ஜகத் தேசாயை சந்தித்த முதல் மாதத்திலேயே கர்ப்பம் ஆகிவிட்டேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய குழந்தைக்காக ஈகோவை விட்டுவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.