திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெள்ளித்திரையில் கலக்கிய 10 சின்னத்திரை பிரபலங்கள்.. அசத்தலான கெட்டப்

சினிமாவில் சிலர் வாரிசு நடிகராக எளிதில் நுழைந்து விட்டாலும், ஒரு சிலருக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட நடிகர், நடிகைகளின் அசத்தலான கெட்டப்பை பற்றி பார்ப்போம்.

ஸ்ருதி ராஜ்: தென்றல் சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகை ஸ்ருதி ராஜ் ரசிகர்களின் ஒவ்வொருத்தரின் வீட்டிலும் குடும்ப உறுப்பினராகவே மாறினார். அதன்பிறகு அதே போன்ற கெட்டப்பில் நிறைய சீரியல்களில் நடித்த ஸ்ருதி ராஜுக்கு சினிமா கதாநாயகிகளுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்த ஸ்ருதி ராஜின் கெட்டப் அசத்தலாக இருக்கிறது.

தென்றல் சீரியலின் துளசி

shruthi-raj-cinemapettai
shruthi-raj-cinemapettai

திவ்யதர்ஷினி டிடி: சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை தொகுப்பாளினியாக ரவுண்டு கட்டியவர் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். அதன் பின் இவர் சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் ஆரம்பத்தில் இருந்த டிடியை பார்க்கும் போது அவருக்குள் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா! என வியப்படைய வைக்கிறது.

தொகுப்பாளினியாக ரவுண்டு கட்டிய திவ்யதர்ஷினி

DD-1-cinemapettai
DD-1-cinemapettai

Also Read: விஜய் டிவி பிரபலங்களின் ரியலான 6 ஜோடியின் புகைப்படங்கள்.. பலநாள் திருமணத்தை மறைத்த நடிகர்

ரோபோ சங்கர்: கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ரோபோ சங்கர், அதன் பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தற்போது ரோபோ சங்கர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார்.

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய ரோபோ சங்கர்

robo-shankar-1-cinemapettai
robo-shankar-1-cinemapettai

ரியோ ராஜ்: கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியலின் மூலம் நடிகராக தனது வாழ்க்கையை துவங்கிய ரியோ ராஜ். ஒரு காலத்தில் வீடியோ ஜாக்கியாகவும் பணிப்புரிந்தார். அதன் பின் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சியில் ரியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். அதன் பின் வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற நகைச்சுவை படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். வெள்ளித்திரைக்கு வந்த பிறகு இவருடைய தோற்றம் முற்றிலுமாக மாறியது. அது மட்டுமல்ல பழைய புகைப்படத்தை பார்த்தால் இது ரியோவா! என கேட்கும் அளவுக்கு இருக்கும்.

இது ரியோவா!

Rio-raj-cinemapettai-cinemapettai
Rio-raj-cinemapettai-cinemapettai

Also Read: உங்க ஐந்து பேரிடம் சரக்கு இல்ல, துரத்திய சன் டிவி.. விஜய் டிவியின் பில்லர் இப்ப அவங்க தான்!

ஐஸ்வர்யா ராஜேஷ்: அசத்தப்போவது யாரு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கோலிவுட்டிங் டாப் நடிகை லிஸ்டில் இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, கதாநாயகி, தங்கை என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பிச்சு உதறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவருடைய மாற்றத்தை பார்க்கும் போது அசத்தலாக உள்ளது.

அசத்தப்போவது யாரு ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya-Rajesh-1-cinemapettai

பிரியா பவானி சங்கர்: செய்தித் தொகுப்பாளராக வாழ்க்கையை துவங்கிய பிரியா பவானி சங்கர், அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடிப்பதன் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகி, தற்போது டாப் நடிகர்களின் படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய ஆரம்ப கால புகைப்படத்தை பார்க்கும்போது இவர் பிரியா பவானி சங்கரா! என பலரையும் ஆச்சரியப்படுத்தும்.

‘கல்யாண முதல் காதல் வரை’ என்ற சீரியலின் பிரியா பவானி சங்கர்

Priya-Bhavani-Shankar-1-cinemapettai
Priya-Bhavani-Shankar-1-cinemapettai

இவர்களுடன் நிஷா கிருஷ்ணன், வாணி போஜன், சந்தானம், கார்த்திக் ராஜ் உள்ளிட்டோரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகி தங்களை மேலும் பொலிவுப்படுத்திக் கொண்டனர்.

Also Read: செவுத்துல அடிச்ச பந்து போல் மாறிய விஜய் டிவி பிரபலம்.. சிவகார்த்திகேயன் போல் மாற முடியாததால் வேதனை

Trending News