புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எப்புட்றா! சூர்யாவை வியந்து பார்க்கும் திரையுலகம்.. டெக்னாலஜியை வைத்து காலத்தை ஓட்டும் விஜய், அஜித்

Actor Suriya: நடிகர் சிவகுமாரின் மகனாக திரையுலகில் சூர்யா அறிமுகமானாலும் தன்னுடைய திறமையால் தான் படிப்படியாக முன்னேறியவர். அதிலும் இவரை இப்போது திரையுலகமே வியந்து பார்க்கிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் வெறித்தனமான கெட்டப்பில் மிரட்டுகிறார்.

இப்போது கோலிவுட்டில் உச்ச நாயகன்களாக இருக்கக்கூடிய அஜித், விஜய் கூட இதை செய்யாமல் டெக்னாலஜியை நம்பிய காலத்தை ஓட்டுகின்றனர். ஆனால் சூர்யா அப்படி கிடையாது, ஒவ்வொரு படத்திலும் உடல் எடையை திடீரென்று ஏற்றுகிறார், திடீரென்று குறைக்கிறார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் அசுரத்தனமான நடிப்பை காட்டி இருக்கிறார்.

இந்தப் படத்திற்காக அவர் உடல் ஏறினார். அதேசமயம் இவருடைய அடுத்த படமான சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் காலேஜ் பையன் போல் நடிக்கப் போகிறார். இதற்காக அவரது உடல் எடையை கணிசமாக குறைக்க திட்டமிட்டுள்ளார். இதே சூழ்நிலையில் விஜய், அஜித் இருந்தால் நிச்சயம் அவர்கள் ‘டீம் டிஏஜிங் (De-Aging)’ டெக்னாலஜியைப் பயன்படுத்த பார்ப்பார்களே தவிர கஷ்டப்பட்டு உடல் எடையை குறைக்க மாட்டார்கள்.

தற்போது கூட விஜய் ‘தளபதி 68’ படத்தில் தந்தை- மகன் கேரக்டரில் நடிக்கிறார். இதில் டெக்னாலஜி வைத்து தான் இரண்டு கேரக்டரில் மாறி மாறி நடிக்க இருக்கிறார். அதேபோல் தான் விடாமுயற்சி படத்திலும் அஜித் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார். அதற்கும் அவர் எந்தவித மாற்றத்தையும் உடலில் செய்யாமல் டெக்னாலஜியின் உதவியுடன் தான் இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டி நடிக்க பார்க்கிறார்.

ஆனால் சூர்யா அப்படி கிடையாது, தன்னையே வருத்திக்கொண்டு ஒவ்வொரு படத்திலும் வெறித்தனமாக உடல் எடையை மாற்றி கெட்டப் போடுகிறார். அதிலும் சூர்யா 43 படத்தில் ஆயுத எழுத்து, ஜில்லுனு ஒரு காதல் படத்தில் டீனேஜ் லுக்கில் எப்படி சூர்யா இருந்தாரோ, அதேபோல் தான் இப்போது மாறப் போகிறார்.

இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா. துல்கர் சல்மானும் இணைந்து நடிக்கின்றனர்.

Trending News